ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பிரத்யேக தயாரிப்புகளாக சில ஃபோன்களை அறிமுகம் செய்கின்றன. வெகுஜன வாடிக்கையாளர்களை மையமாக வைத்து பட்ஜெட் விலை ஃபோன்கள் விற்பனைக்கு வரும் அதே சமயத்தில், மிகுந்த சிறப்பு வாய்ந்த வசதிகளை கொண்ட பிளாக்ஷிப் ஃபோன்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்புகளை ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்கள் அவ்வபோது வெளியிடுகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் ஒன் பிளஸ் 10 ப்ரோ ஃபோன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோன்று iQOO 9 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 22 போன்ற ஃபோன்களும் விற்பனைக்கு வந்துள்ளன. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஃபோனுக்கு நல்ல போட்டியை ஏற்படுத்தக் கூடியதாக இந்த இரண்டு ஃபோன்களும் உள்ளன. ஆகவே, இந்த மூன்று பிளாக்ஷிப் ஃபோன்களை ஒப்பீடு செய்து, எது சிறந்தது என்று இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
டிசைன்
டிசைனை பொருத்தவரையில் இந்த மூன்று ஃபோன்களுமே ஏறக்குறைய ஒரேமாதிரியாகத் தான் இருக்கின்றன. இதில் சாம்சங் கேளக்ஸி எஸ் 22 ஃபோன் நல்ல தெளிவான டிசைனில் அமைந்துள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் iQOO 9 ப்ரோ ஆகிய ஃபோன்களில் இடம்பெற்றுள்ள கேமராக்கள் காரணமாக, அதன் டிசைன்களில் எட்ஜ் லுக் நன்றாக இருக்கிறது. ஆனால், iQOO 9 ப்ரோ ஃபோனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டன்ஸ் குறைபாடுகள் இருக்கின்றன. iQOO 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் ஃபோன்களில் கர்வ்டு டிஸ்பிளே இருக்கிறது. ஆனால், சாம்சங் ஃபோனில் பிளாட் பேனல் இடம்பெற்றுள்ளது.
டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸியில் மிக அற்புதமான டிஸ்பிளே வசதி இருக்கிறது. அதே சமயம், இதை விட கூடுதலாக ஒன்பிளஸ் மற்றும் iQOO 9 ப்ரோ ஃபோன்களில் க்யூ.ஹெச்.டி+ ரிசொல்யூஷன் வசதி உள்ளது. ஒன்பிளஸ் மற்றும் iQOO 9 ப்ரோ ஃபோன்களில் ஸ்க்ரீன்கள் சிறப்பாக உள்ளன. இதனுடன் iQOO 9 ப்ரோ ஃபோனில் சேம்ப்ளிங் ரேட் சிறப்பாக உள்ளதால் ஸ்மூத்தான கேமிங் அனுபவத்தை பெறலாம்.
Also Read : 'சைலன்ட்' ஆக இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 7 புதிய அம்சங்கள்!
பெர்பாமென்ஸ்
இந்த மூன்று ஃபோன்களுமே தொடர்புடைய நிறுவனங்கள் சார்பில் சிறப்பு வாய்ந்தவை என தெரிவிக்கப்படுவதால், நல்ல பெர்மாமன்ஸை வழங்கும் ஸ்நாப் டிராகன் சிப் பொருத்தியுள்ளனர். எனினும், கேளக்ஸியைக் காட்டிலும் ஒன்பிளஸ் 10 ப்ரோ நல்ல பெர்மாமென்ஸ் தருகிறது. இந்த இரண்டைக் காட்டிலும் iQOO 9 ப்ரோவின் பெர்மாமென்ஸ் கூடுதல் சிறப்புடன் அமைந்துள்ளது.
பேட்டரி திறன்
மூன்று ஃபோன்களையும் ஒப்பிடுகையில் கேலக்ஸி எஸ் 22 ஃபோனில் பேட்டரி திறன் குறைவு. இதன் பவர் 3,700 மெஏஹெச் மட்டுமே. இதனால், நாள் முழுவதும் ஹெவியான பயன்பாடுகளுக்கு இது ஒத்து வராது. இதற்கு அடுத்த படியாக, iQOO 9 ப்ரோ 4,700 மெஏஹெச் பேட்டரியுடன் வருகிறது. இதில் நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான பவர் கிடைக்கும். இருப்பதிலேயே அதிகமாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் பேட்டரி திறன் கொண்டதாக ஒன்பிளஸ் 9 ப்ரோ அமைந்துள்ளது. இதில், 5,000 மெஏஹெச் பேட்டரி உள்ளது.
Also Read : 10 லட்சத்துக்கும் மேற்பட்ட WhatsApp கணக்குகள் முடக்கம்..!
கேமரா
iQOO 9 ப்ரோ மற்றும் ஒன் பிளஸ் 10 ப்ரோ ஆகிய ஃபோன்களில் கேமரா வசதிகள் சிறப்பாக உள்ளன. ஆனால், சாம்சங் ஃபோனில் ஹார்டுவேரில் உள்ள குறைபாடு காரணமாக கேமரா வசதி அந்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை. iQOO 9 ப்ரோ ஃபோனில் 50 எம்பி கேமரா, 50 எம்பி அல்ட்ராவைடு கேமரா மற்றும் 16 எம்பி டெலிஃபோட்டோ கேமரா ஆகிய வசதிகளுடன் செல்ஃபி எடுக்க 16 எம்பி கேமரா வசதி உள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஃபோனில் 48 எம்பி கேமரா, 50 எம்பி அல்ட்ராவைடு கேமரா, 8 எம்பி டெலிஃபோட்டோ ஆகியவற்றுடன், 32 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது. சாம்சங் கேளக்ஸி எஸ் 22 மாடலில் 50 எம்பி கேமரா, 12 எம்பி அல்ட்ராவைடு, 10 எம்பி டெலிஃபோட்டோ மற்றும் 10 எம்பி செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சாஃப்ட்வேர்
சாஃப்ட்வேர் செக்சனில் சாம்சங் ஃபோன் கிங்-ஆக உள்ளது. இதில் 4 ஆண்டு கால ஓ.எஸ். அப்டேட் முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஃபோனில் மூன்று அப்டேட்களும், iQOO 9 ப்ரோ ஃபோனில் இரண்டு அப்டேட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
Also Read : Google Chrome-ல் பாதுகாப்பு சிக்கல்.! ஹேக் செய்ய வாய்ப்புள்ளது..
விலை விவரம்
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஃபோனின் விலை ரூ.66,999 ஆகும். சாம்சங் கேலக்ஸி எஸ் 22 விலை ரூ.72,999 ஆகும். iQOO 9 ப்ரோ விலை ரூ.64,990 ஆகும். பேட்டரி திறன் குறைவு, ஹீட்டிங் பிரச்சினை போன்றவை சாம்சங் ஃபோனில் உள்ளன. நல்ல பெர்மாமன்ஸ், கேமிங் அனுபவம் ஆகியவற்றுக்கு iQOO 9 ப்ரோ சிறந்த தேர்வாக இருக்கும். பெர்மாமென்ஸ், கேமரா உள்ளிட்ட வசதிகளுக்கு சிறந்த தேர்வாக ஒன்பிளஸ் 10 ப்ரோ இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.