முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்தியாவில் அறிமுகமான OnePlus 10 Pro ஸ்மார்ட் ஃபோன்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

இந்தியாவில் அறிமுகமான OnePlus 10 Pro ஸ்மார்ட் ஃபோன்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

Oneplus 10 Pro

Oneplus 10 Pro

OnePlus 10 Pro | இந்த புதிய மொபைல் 5,000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. கேமராவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 48MP மெயின் சோனி லென்ஸ், 50MP அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 8MP மேக்ரோ ஷூட்டர் அடக்கம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

ஒன்பிளஸ் நிறுவனம் தனது லேட்டஸ்ட் பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோனான ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro) என்ற 5ஜி மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜர், 120Hz ரெஃப்ரெஷ் ரெட் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது.

Samsung Galaxy S22 மற்றும் iPhone 13 போன்றவற்றுடன் போட்டியிடும் வகையில் விலை உயர்ந்த மொபைலாக OnePlus 10 Pro களமிறக்கப்பட்டு உள்ளது.

OnePlus 10 Pro விலை மற்றும் கிடைக்கும் தன்மை:

OnePlus 10 Pro மொபைல் 2 ஸ்டோரேஜ் வேரியன்ட்களில், 2 கலர் ஆப்ஷன்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 8GB + 128GB ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி கொண்ட OnePlus 10 Pro மொபைல் வேரியன்ட்டின் விலை ரூ.66,999-ஆகவும், 12GB + 256GB ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி கொண்ட OnePlus 10 Pro மொபைல் வேரியன்ட்டின் விலை ரூ.71,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மொபைல் வோல்கானிக் பிளாக் மற்றும் எமரால்ட் ஃபாரஸ்ட் உள்ளிட்ட 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய மொபைல் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் அமேசான் இந்தியாவிலும், ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும் விற்பனைக்கு வர உள்ளது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:

டூயல் சிம் (நானோ) ஆப்ஷனுடன் வரும் OnePlus 10 Pro மொபைலானது ஆண்ட்ராய்டு 12-ல் ஆக்சிஜன் OS 12.1 உடன் இயங்குகிறது. 6.7-இன்ச் QHD+ Fluid AMOLED டிஸ்ப்ளேவை கொண்டு வருகிறது. மேலும் இது இரண்டாம் தலைமுறை குறைந்த வெப்பநிலை பாலிகிரிஸ்டலின் ஆக்சைடு (LTPO) டெக்னலாஜியை அடிப்படையாக கொண்டது. இந்த மொபைல் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கொண்டது. ஆக்ட்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 Gen 1 SoC ப்ராசஸர் கொண்டுள்ளது. இந்தியாவில் Snapdragon 8 Gen 1 சிப்செட்டை கொண்டிருக்கும் ஒன்பிளஸ்ஸின் முதல் ஸ்மார்ட் போன் ஆகும்.

Also Read : ஆண்டிராய்டு யூஸர்களின் விவரங்களை திருடிய கூகுள்..

இந்த புதிய மொபைல் 5,000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. கேமராவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 48MP மெயின் சோனி லென்ஸ், 50MP அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 8MP மேக்ரோ ஷூட்டர் அடக்கம். மொபைலின் முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் v5.2, GPS/ A-GPS, NFC, மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.

First published:

Tags: Oneplus, Technology