கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷனாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை, ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 31 அன்று மாலை 7:30 மணிக்கு இந்தியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும். இதனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ரேடியன்ட் சில்வரும் அறிமுகமாகும். இந்த வெளியீட்டு நிகழ்வானது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் யூட்யூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு இந்தியா எப்போதுமே ஒரு முக்கியமான சந்தையாக இருப்பதால், ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட்2-வை இந்திய நுகர்வோர்களுக்கு மட்டுமே கொண்டு வரவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட்2-வின் சில முக்கிய விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. அதில் "பாஸ்ட் சார்ஜிங், லாங்கர் பேட்டரி லைஃப் மற்றும் இம்ப்ரூவ்டு சவுண்ட் குவாலிட்டி மற்றும் பேஸிற்கான லார்ஜர் ட்ரைவர்ஸ்" ஆகியவைகள் கவனிக்கத்தக்கது.
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் (சீனா) :
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் வாங்க கிடைக்கிறது மற்றும் அதே மாடல் சிறிய மாற்றங்களுடன் இந்திய சந்தைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 10 ப்ரோவின் சீன மாடல் ஆனது 6.7 இன்ச் க்யூஎச்டி+ எல்டிபிஓ டிஸ்ப்ளேவுடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வருகிறது.
மேலும் இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 80W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.
Also Read : WhatsApp-ல் இனி 2GB சைஸ் கொண்ட ஃபைல்ஸ்களையும் அனுப்பலாம்.!!
ஒன்பிளஸ் நிறுவனம் இம்முறையும் ஒன்பிளஸ் 10 ப்ரோவின் கேமரா அமைப்பிற்காக ஹாசல்பிளாட் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் ரியர் கேமரா அமைப்பில் 48-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்789 சென்சார் + 50-மெகாபிக்சல் சாம்சங் ஐசோசெல் ஜெஎன்1 சென்சார் + 8-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவைகளை உள்ளடக்கிய ட்ரிபிள் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
சீனாவில் உள்ள 10 ப்ரோ மாடலானது ஆண்டராய்டு 12 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 12.1 உடன் வருகிறது. ஆனால் க்ளோபல் மாடலில் அது இருக்காது. இந்தியா மற்றும் பிற சந்தைகளில், ஒன்பிளஸ் 10 ப்ரோவில் ஆக்சிஜன்ஓஎஸ் இடம்பெறும்.
Also Read : 34 வயது நபரின் உயிரைக் காத்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்...
விலையைப் பொறுத்தவரை, சீனாவில், 10 ப்ரோவின் விலையானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.54,500-க்கு ஆரம்பிக்கிறது. இந்திய விலை இதை சுற்றியே இருக்குமா அல்லது இன்னும் அதிகமாக இருக்குமா என்பதில் தெளிவு இல்லை. பெரும்பாலும் 9 ப்ரோ மாடலின் வெளியீட்டு விலையுடன் 10 ப்ரோ மாடலின் விலை ஒத்து போகலாம். நினைவூட்டும் வண்ணம், 9 ப்ரோவின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்தியாவில் ரூ.64,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.