வகை வகையான எலெக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் ஒவ்வொரு வாரமும் வெளிவந்து கேட்ஜெட் பிரியர்களுக்கு சிறப்பு விருந்தை தந்து வருகிறது. பல வித கேட்ஜெட்கள் இருந்தாலும் சில அத்தியாவசிய கேட்ஜெட்களை மக்கள் பொதுவாக வாங்கி குவித்து விடுவார்கள். அந்த வகையில் எல்லோருடைய வீட்டிலும் இருக்க கூடிய முக்கிய எலக்ட்ரானிக் பொருட்களில் டிவியும் ஒன்று. ஒவ்வொருவருக்கும் டிவி வாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் வைத்திருப்பார்கள். அந்த பட்ஜெட்டுக்குள் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்று விட வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கும்.
குறிப்பாக தற்போதைய கால கட்டத்தில் தொழிற்நுட்ப வளர்ச்சி அதிகமாகி உள்ளதால், பல வித வசதியுடன் டிவிக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சிறந்த டிஜிட்டல் திரை, ஸ்மார்ட் தொழிற்நுட்ப வசதி, தரமான அனுபவத்தை தர கூடிய டவுட் எபக்ட்ஸ் போன்ற முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இந்த பதிவில் ஒன்பிளஸ் 43 Y1S ப்ரோ டிவி பற்றிய பல விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஒன்பிளஸ் பிராண்ட் தற்போது தனது புதிய ஒன்பிளஸ் 43 Y1S ப்ரோ ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் விற்பனை செய்ய உள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் டிவி என்பது மக்களின் பட்ஜெட்டுக்குள் வரக்கூடிய 4k ஸ்மார்ட் டிவி வகையை சார்ந்ததாக இருக்கும். இது ஆண்ட்ராய்டு டிவி தளத்தில் ஆக்சிஜன் யூசர் இன்டெர்பெஸ் மூலம் இயங்குகிறது. ஒன்பிளஸ் வழங்கும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிக்கு பல விற்பனைச் சலுகைகள் வரவுள்ளது.
also read : Flipkart-ல் இவ்ளோ குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் - முழு விவரம்
அதன்படி இந்தியாவில் ஒன்பிளஸ் 43 Y1S ப்ரோ டிவியின் விலை ரூ. 29,999 ஆக விற்பனை ஆகவுள்ளது. இந்த டிவி 4K ஸ்மார்ட் டிவி வகையை சேர்ந்தது. இந்த டிவியை வாங்குபவர்களுக்கு ஒன்பிளஸ் பிராண்ட் சிறப்பு விற்பனையை தருகிறது. எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி டிவி வாங்கும் போது ரூ.2,500 சிறப்பு தள்ளுபடியை நீங்கள் பெறலாம். இந்தச் சலுகையைப் பெற்று ஒன்பிளஸ் 43 Y1S ப்ரோ டிவியை ரூ.27,499-க்கு பெற்று கொள்ளலாம்.
also read : உங்கள் IPhone-ல் வாட்ஸ் அப் சாட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி?
மேலும் இந்த ஒன்பிளஸ் டிவியை நீங்கள் இ.எம்.ஐ-இல் வாங்க விரும்பினால் 6 மாதங்கள் வரையிலான விலையில்லா EMI சலுகைகளையும் பெறலாம். இத்துடன், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு மூலம் ஒன்பிளஸ் 43 Y1S ப்ரோ டிவியை வாங்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீத கேஷ்பேக்கும் கிடைக்க உள்ளது. இந்த டிவியானது 43-இன்ச் 4K டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது ஒட்டுமொத்த படத் தரத்தை மேம்படுத்துவதற்காக காமா எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே HDR10+, HDR10 மற்றும் HLG கோடுகளை சப்போர்ட் செய்கிறது.
இந்த டிவி சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் இதன் பிரீமியம் தோற்றமானது இந்த தயாரிப்பின் ஒட்டுமொத்த அழகைக் கூட்டுகிறது. மேலும் இந்த ஒன்பிளஸ் டிவியில் டால்பி ஆடியோ வசதியுடன், 24W இரட்டை டூயல் சவுண்ட் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இதில் ஆன்ட்ராய்டு டிவி வெர்ஷன் 10 இயங்குதளத்தில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அல்லது வயர்லெஸ் இயர்பட்ஸ் பயன்படுத்துவோர் இந்த டிவியைப் பயன்படுத்தும் போது மேலும் சிறந்த பல பலன்களைப் பெறுவார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.