OnePlus 11 5G, OnePlus Buds Pro 2 மற்றும் "பல்வேறு OnePlus தயாரிப்புகளுக்கான" உலகளாவிய ஆஃப்லைன் வெளியீட்டு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
OnePlus நிறுவனம் 2019க்குப் பிறகு இந்தியாவில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துவது இதுவே முதல் முறை. அந்த நிகழ்ச்சியில் ஒன் பிளஸ் நிறுவனம் இதுவரை 5.5 கோடி ஸ்மார் ஃபோன்கள், 1.5 கோடி இயர்பட்ஸ் மற்றும் 20 லட்சம் டிவிகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஒன் பிளஸ் 11, ஒன் பிளஸ் 11 ஆர், ஒன் பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன் பிளஸ் பட்ஸ் ப்ரோ 2ஆர், ஒன் பிளஸ் டிவி க்யூ2 ப்ரோ 65 ஆகியவற்றின் விலை பட்டியலும் வெளியிடப்படும் தேதியும் அறிவிக்கப்பட்டது. ஒன் பிலஸ் ஹப் 5ஜி வைஃபை ரூட்டரும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூலை 2023ல் இருந்து இது சந்தையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
ஒன் பிளஸ் 11
முன்பதிவு தேதி: பிப்ரவரி 7, விற்பனை: பிப்ரவரி 14
8GB RAM, 128GB ஸ்டோரேஜ் - ரூ. 54,999
16GB RAM, 128GB ஸ்டோரேஜ் - ரூ. 61,999
ஒன் பிளஸ் 11 ஆர்
முன்பதிவு தேதி: பிப்ரவரி 21, விற்பனை: பிப்ரவரி 28
8GB RAM, 128GB ஸ்டோரேஜ் - ரூ. 39,999
16GB RAM, 128GB ஸ்டோரேஜ் - ரூ. 44,999
ஒன் பிளஸ் பட்ஸ்
ஒன் பிளஸ் பட்ஸ் ப்ரோ 2ஆர் - ரூ 9,999
ஒன் பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 - ரூ 11,999
ஒன் பிளஸ் டிவி க்யூ2 ப்ரோ 65
ரூ. 99,999
முன்பதிவு தேதி: மார்ச் 6, விற்பனை: மார்ச் 10
இதற்கான முன்பதிவு தேதிகளுடன் அறிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Launch, Mobile phone, One plus, Technology