ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வார்த்தைகள் தேவையில்லை, எமோஜிக்களே போதும் - மிகவும் பிரபலமான மற்றும் மோசமான எமோஜிகள்!

வார்த்தைகள் தேவையில்லை, எமோஜிக்களே போதும் - மிகவும் பிரபலமான மற்றும் மோசமான எமோஜிகள்!

எமோஜி

எமோஜி

பல ஆண்டுகளாக, டிஜிட்டல் உலகில், தகவல்தொடர்புக்கு நவீனகால ஹைரோகிளிஃப்களாக எமோஜிகள் பயன்பாட்டில் உள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

உலக எமோஜிகள் தினம் நேற்றுமுன்தினம் அனுசரிக்கப்பட்டது . கடந்த சில ஆண்டுகளாக, டிஜிட்டல் உலகத் தகவல்தொடர்பில், எமோஜிக்களே நவீனகால ஹைரோகிளிஃப்களாக மாறியுள்ளன. நவீன எமோஜிகள் பயன்பாடு, 1999 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது.

நம்முடைய டிஜிட்டல் கீபோர்டுகளில், காலண்டர் எமோஜி தோன்றிய தேதி என்பதால், ஜூலை 17 உலக எமோஜி தினமாக கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எமோஜி எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?

பல ஆண்டுகளாக, டிஜிட்டல் உலகில், தகவல்தொடர்புக்கு நவீனகால ஹைரோகிளிஃப்களாக எமோஜிகள் பயன்பாட்டில் உள்ளன. நவீன எமோஜிகள் 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஜப்பானிய கோடர் (coder) ஷிகேடகா குரிட்டா ஜப்பானிய பேஜர்கள் (pagers) இதய எமோட்டிக்கான்களை அனுப்பவும் பெறவும் உதவும் வகையில் அவற்றைக் கண்டுபிடித்தார்.

ALSO READ |  அமேஸ்ஃபிட் அறிமுகப்படுத்தவுள்ள Zepp Z ஸ்மார்ட்வாட்ச்: இதன் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்கள்!

அன்றிலிருந்து, யூனிகோட் கன்சார்ட்டியம் (Unicode Consortium), மென்பொருள் தளங்களில் எமோஜி உள்ளிட்ட பல்வேறு கேரக்டர்களுக்கான சர்வதேச தரத்தை நிர்ணயித்துள்ளது. அதன் ஃபிரீக்வென்சியை, தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகப் பயன்படுத்தி, எந்த எமோஜி பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்கிறது.

அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட எமோஜிகள்:

1. ஹார்ட் – இதய எமோஜி

முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, முதலில் பயன்படுத்தப்பட்ட எமோஜியே, அதிகமாக பயன்படுத்தப்பட்ட எமோஜி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

சிவப்பு நிற இதய எமோஜி, இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எமோடிகான்களில் ஒன்றாகத் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. இது காதலையும், அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தப் பயன்படுகிறது. நீங்கள் 'அடிக்கடி பயன்படுத்தப்படும்' எமோஜிகள் பட்டியலிலும் இது இருக்கலாம். கீபோர்டுகளில் இரண்டு சிவப்பு இதய எமோஜிகள் உள்ளன - ஒன்று சிவப்பு இதயம், மற்றொன்று ஹார்ட் சூட் (heart suit).

2. கண்ணீருடன் வாய்விட்டு சிரிக்கும் முக எமோஜி

ஆன்லைன் சாட் மற்றும் சமூக வலைத்தளங்களில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் எமோஜிகள் பட்டியலில், கண்ணீருடன் சிரிக்கும் எமோஜி மிகவும் பிரபலமானது. Worldemojiday.com பதிவு செய்திருந்த தரவில், டிவிட்டரில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட எமோஜி இது தான் என்று தெரிவித்தது. Emojitracker-இன் அறிக்கை படி, கண்ணீருடன் சிரிக்கும் முக எமோஜி 2 பில்லியனுக்கும் மேலாக, டிவிட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறது.

2. கண்களில் இதயத்தோடு புன்னகைக்கும் முக எமோஜி

Worldemojiday.com வெளியிட்டிருந்த புள்ளிவிவரங்கள் படி, இந்த எமோஜி, ஃபேஸ்புக்கில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

3. பிறந்தநாள் கேக்

ஃபேஸ்புக்கில் அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் மற்றொரு எமோஜி, மெழுகுவர்த்தியுடன் கூடிய பிறந்தநாள் கேக் எமோஜி. பிறந்தநாள் வாழ்த்து குறித்த நினைவூட்டல் அறிவிப்பை ஃபேஸ்புக் வெளியிடுவதால், இந்த எமோஜி அதிகமாகப் பயன்படுத்தப்படலாம்.

4. உயர்த்தப்பட்ட ஃபிஸ்ட் எமோஜி

உலகெங்கிலும் கண்டனத்தை உண்டாக்கிய பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் போராட்டத்தின் போது, கைகள் மடக்கிய நிலையில், உயர்த்தப்பட்ட எமோஜி (Raised fist) மிகவும் பிரபலமாக மாறியது. Worldemojiday.com வெளியிட்டிருந்த தகவல் படி, இந்த எமோஜி 2020 ஆம் ஆண்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைவாக பயன்படுத்தப்பட்ட எமோட்டிக்கான்கள்:

பிரபலமான எமோஜிகள் இருக்கும் போது, பயன்படுத்தாத எமோஜிகள் இருப்பதும் இயல்பே. மிகவும் குறைவாக பயன்படுத்தப்பட்ட எமோட்டிக்கான்கள் பட்டியல் இங்கே.

1. கடிகார முகம் (clock face)

ஒரு நாளில், அரைமணிக்கு ஒரு முறை கடிகார முகம் எமோஜி பயன்படுத்தப்பட்டாலும், இணையத்தில் குறைவான பயன்பாட்டில் இருக்கும் எமோஜியாகவே இருக்கின்றது.

2. புள்ளிவிவரங்கள் எமோஜி (Statistics Emoji)

கேல்குலேஷன்களை குறிக்கும் எமோஜியான புள்ளிவிவரங்கள் எமோஜியும், இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை.

ALSO READ |  ₹ 10000-க்கும் கீழ் விற்பனையாகும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் - முழு விவரம்

3. வாட்டர் போலோ விளையாடும் நபர்

இந்த விளையாட்டு எமோஜியும் பெரிதாக அறியப்படாததாக இருக்கிறது.

4. கீகேப் டிஜிட் ஒன் (Keycap Digit One)

Emojipedia கூறிய தகவலின் படி, இந்த எமோஜி ஃபேஸ்புக்கில் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Emoji