முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஆக்சிஜன் கண்டுப்பிடித்து 248 ஆண்டுகளானது என்றால் நம்புவீர்களா?

ஆக்சிஜன் கண்டுப்பிடித்து 248 ஆண்டுகளானது என்றால் நம்புவீர்களா?

ஆக்சிஜன் கண்டு பிடித்து 248 ஆண்டுகளானது.

ஆக்சிஜன் கண்டு பிடித்து 248 ஆண்டுகளானது.

சாதாரண காற்றை விட தனித்த ஆக்சிஜன் ஐந்து அல்லது ஆறு மடங்கு சிறந்ததாக இருந்தது.மேலும் அது மெழுகுவர்த்தியை சாதாரண நேரத்தை விட நான்கு மடங்கு அதிக நேரம் எரித்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத தேவை என்றால் அது ஆக்சிஜன் தான். உயிர் வாயு என்று சொல்லப்படும் இதன் அளவு சிறிது மாறுபட்டாலும் உலகமே அல்லோலப்பட்டுவிடும். விண்வெளி, ஆழ்கடல், மலை உச்சிகளுக்கு பயணிக்கும் போது அத்தியாவசிய தேவையே ஆக்சிஜன் தான். அந்த வேதியல் கூடு கண்டு பிடித்து இரண்டரை நூற்றாண்டுகள் ஆக போகிறது என்றால் நம்புவீர்களா?

சென்ற வருடம் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக உலகமே தவித்துக்கொண்டிருந்தது. அதன் ஆரம்பம் சரியாக 248 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆகஸ்ட் 1, 1774 அன்று, தனது 40 வயதின் முற்பகுதியில் இருந்த ஒருவர், காற்றின் தன்மையைப் புரிந்துகொள்வதற்கான தொடர் சோதனைகளைத் தனது ஆய்வகத்தில் செய்துகொண்டிருந்தார். அன்றைய பரிசோதனையின் மூலம், ஜோசப் ப்ரீஸ்ட்லி என்ற மனிதனுக்கு இயற்கை அதன் அடிப்படை உண்மைகளில் ஒன்றை வெளிப்படுத்தியது. அதன் விளைவு வேதியியலின் முக்கிய புள்ளியானது.

கடந்த கால சோதனைகளில், ஜோசப் பிரீஸ்ட்லி வெவ்வேறு காற்றின் கூறுகளைத் தேடி, அவற்றின் பண்புகளைக் கவனிக்க முயன்றார். ஒரு சோதனையில், எரியும் மெழுகுவர்த்தியை ஒரு ஜாடியில் வைத்தபோது, ​​​​அது அணைந்ததை கவனித்தார். காற்றின் ஒரு கூறு  இல்லாததால் நெருப்பு அணைந்தது என்பதை அறிந்தார்.

இருப்பினும், அதே குடுவையில் ஒரு பச்சை செடியை வைத்து சூரிய ஒளியில் வைத்தால், காற்றை மீண்டும் கொண்டு வரும், இது சுடர் எரிவதற்கு அனுமதிக்கும் என்பதை கண்டு பிடித்தார். அப்போது எரிவதற்கு தேவையான வேதியல் கூறை தாவதாரத்தால் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்தார். அந்த கூறை பிரித்து எடுத்து சோதிக்கும் முயற்சியில் இறங்கினர்.

கழிவுநீரை சுத்தகரிக்கும் தொழில்நுட்பம்.. ஐஐடி மும்பையோடு இணையும் பிரஹன்மும்பை

ஆகஸ்ட் 1 ஆம் தேதி, ப்ரீஸ்ட்லி, பாதரச ஆக்சைடு என்ற சிவப்பு நிற திடப்பொருளின் ஒரு கட்டியை எடுத்து, ஒரு தலைகீழ் கொள்கலனுக்குள் வைத்தார்.அதை பாதரசத்தின் மேல் வைத்தார். பின்னர் அவர் ஒரு குவியாடி எடுத்து, சூரிய ஒளியை சிவப்பு நிறக் கட்டியின் மீது செலுத்தினார். அந்த பொருள் எரிந்து, அதனால் உற்பத்தி செய்யப்படும் காற்றைச் சேகரித்தார்.

சேகரித்த காற்று, சாதாரண காற்றை விட ஐந்து அல்லது ஆறு மடங்கு சிறந்ததாக இருந்தது.மேலும் அது மெழுகுவர்த்தியை முந்தையதை விட நான்கு மடங்கு அதிக நேரம் எரிக்கவும் அனுமதித்தது. ப்ரீஸ்ட்லி "டிப்லோஜிஸ்டிக்டேட்டட் ஏர்" என்று அதை அழைத்தார்.

பின்னர் அன்டோயின் லாவோசியர் இந்த வேதியல் பொருளுக்கு, ஆக்சிஜன் என்று பெயரிட்டார். இந்த கண்டுபிடிப்பு லாவோய்சருக்கு வேதியியல் எதிர்வினைகள் பற்றிய புரட்சிகர கோட்பாட்டை உருவாக்க ஒரு முக்கியமான ஆதாரமாக இருந்தது. ப்ரீஸ்ட்லியின் கண்டுபிடிப்பு காற்று ஒரு அழியாத தனிமக் கூறு என்ற கருத்தை உடைத்து நவீன வேதியியலுக்கு வழி வகுத்தது.

1733 இல் இங்கிலாந்தில் பிறந்த ப்ரீஸ்ட்லி, மதம் மற்றும் அரசியல் குறித்த அவரது வலுவான மற்றும் வழக்கத்திற்கு மாறான கருத்துக்களால் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. பிப்ரவரி 6, 1804 இல், அவரது கையெழுத்துப் பிரதிகளில் சில மாற்றங்களை அவரது மகன் மற்றும் உதவியாளருக்குக் கட்டளையிட்ட பிறகு, சில நிமிடங்களில் வலியின்றி இறந்தார்.

First published:

Tags: Oxygen, Oxygen cylinder