• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 2 நாட்களில் இத்தனை கோடி விற்பனையா..! ஓலா சிஇஓ உற்சாகம்

2 நாட்களில் இத்தனை கோடி விற்பனையா..! ஓலா சிஇஓ உற்சாகம்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் ஓலா தனது வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி நிலையில், தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • Share this:
ஓலா தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எஸ் 1 (ரூ .99,999) மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ (ரூ .1,29,999) என்ற இரண்டு மாடல்களில் அறிமுகப்படுத்தியது. இதற்கான இரண்டு மாதங்களுக்கு முன்னர் முன்பதிவு தொடங்கிய நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து விற்பனை செய்ய இருந்தது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக செப்டம்பர் 15க்கு ஒத்திவைத்தது. அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விற்பனை தொடங்கியது. செப்டம்பர் 15 அன்று ஓலா செயலியில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து விற்பனை செய்தது.

OLA-வின் பர்ச்சேஸ் போர்ட்டலில் லாகின் செய்து ரூ.20,000 அட்வான்ஸாக செலுத்த வேண்டும். மீதி தொகையை நீங்கள் செலக்ட் செய்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி செய்வதற்கு முன் கட்ட வேண்டும். தற்போது புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் மாதம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விநியோகிக்கப்படும் என்று ஓலா குறிப்பிட்டிருந்தாலும், சரியான தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளரின் வீடுகளுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Also Read : ரெட்மியின் புதிய ஸ்மார்ட் டிவி - செப்டம்பர் 22ம் தேதி அறிமுகம்!

இந்த நிலையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் இரண்டு நாள் விற்பனையில் ரூ .1,100 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது ஆட்டோமொபைல் துறையில் மட்டுமல்ல, இந்திய ஈ-காமர்ஸ் வரலாற்றில் ஒரு நாளில் அதிகப்பட்ச விற்பனையாகும். "நாம் உண்மையிலேயே டிஜிட்டல் இந்தியாவில் வாழ்கிறோம்" என்று அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த வியாழக்கிழமை, 24 மணி நேரத்தில் 600 கோடி ரூபாய் வரை ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகும், இந்த எண்ணிக்கை ஒரு நாளில் மொத்த இரு சக்கர வாகனத் தொழில் விற்பனையை விட அதிகமாக உள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார். மேலும் அடுத்த விற்பனை தீபாவளி கொண்டாட்டத்தின் போது இருக்கும் என்றும், இதற்கான விற்பனை நவம்பர் 1ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் விரைவில் முன் பதிவு மீண்டும் தொடங்கும் என்பதால் ரூ. 499க்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஏற்கனவே முன்பதிவு செய்து ஸ்கூட்டர் வாங்காதவர்களும் அப்போது வாங்கி கொள்ளலாம் என்றும் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Also Read : அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 13: இந்தியாவில் விலை என்ன?

இதனிடையே எலக்டிரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் ஓலா பியூச்சர்பேக்ட்ரி மொத்தமும் பெண்களால் இயங்கக் கூடிய தொழிற்சாலையாக இருக்கும் என அறிவித்துள்ள ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால், இந்த தொழிற்சாலை முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்பு குறைந்தது 10000 பெண்கள் இத்தொழிற்சாலையில் பணியாற்றுவார்கள் என்று அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: