ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

டேமேஜ் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்த ஓலா நிறுவனம் - குவியும் புகார்கள்

டேமேஜ் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்த ஓலா நிறுவனம் - குவியும் புகார்கள்

ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாகனங்கள் சரியாக இயங்கவில்லை என்று புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஓலா நிறுவனம் இந்தியாவில் முன்னோடியாக இருந்து வந்தது. இரண்டு மாடல்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய ஓலா நிறுவனம், ஆகஸ்டு மாதம் முதலே முன்பதிவைத் தொடங்கியது. ஏற்கனவே டெலிவரி சில மாதங்கள் தாமதமான நிலையில், டெலிவரி செய்யப்பட்ட வாகனங்கள் பழுதடைவதாக புகார்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

Ola S1 மற்றும் Ola S1 pro என்ற இரண்டு மாடல்கலுமே அக்டோபர் 25 முதல் நவம்பர் 25 தேதிக்குள் முதல் பேட்ச் டெலிவரி செய்யப்படும் என்று முன்பதிவு செய்யத் தொடங்கிய போது ஓலா நிறுவனம் தெரிவித்தது. ஆனால், அது தாமதமாகி, டிசம்பர் 15 முதல் டிசம்பர் 30 தேதி வரை டெலிவரி செய்யப்படும் என்று சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. EV முன்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்குமே, வாகனங்கள் டெலிவரி தேதி மாற்றம் மற்றும் தாமதம் குறித்து விளக்கம் அளித்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

பல முறை தாமதமாகி, ஒரு வழியாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரி தொடங்கியது. ஆனால், வாகனங்கள் சரியாக இயங்கவில்லை என்று புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

என்னுடைய Ola S1 Pro நேற்று டெலிவரி செய்யப்பட்டது/ 6 கிலோ மீட்டருக்கும் குறைவாக தான் நான் வண்டியை ஓட்டினேன்.

ஆனால் அதற்குள்ளாகவே கிரீச் என்ற ஒலி மற்றும் முகப்பு விளக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டதால், என்னுடைய ஸ்கூட்டரை டோ செய்து எடுத்துச் சென்றனர். சில மணி நேரத்திற்கு உள்ளாகவே வண்டியை சரிசெய்து திருப்பி வழங்குவதாக தெரிவித்த நிறுவனம் இப்போதுவரை டெலிவரி செய்யவில்லை என்று ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை tag செய்து ஒரு யூசர் டிவீட் செய்துள்ளார். அந்த வாடிக்கையாளரின் டிவீட் இங்கே.

also read : உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் வேகத்தை அதிகரிக்க டிப்ஸ்...!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டறுகாக ஆயிரக்கணக்கானோர் காத்திருந்த நிலையில் டெலிவரி செய்யப்பட்ட உடனேயே வண்டி பழுதானது என்ற தகவல் உடனடியாக ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனமும் ஸ்கூட்டரை உடனடியாக சரி செய்து டெலிவரி செய்வதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், பழுதான வாகனத்துக்குப் பதிலாக, புகார் செய்த வாடிக்கையாளருக்கு புதிய ஸ்கூட்டரைத் தான் அந்த நிறுவனம் வழங்கியது. டெலிவரி செய்யப்பட்ட புதிய வாகனத்தில் உடைந்த நம்பர் பிளேட் மற்றும் வாகனத்தில் எண்ணெய் கறைகள் இருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

also read : ஸ்மார்ட் வாட்ச் இல்லாமல் Android மற்றும் iOS-ல் ஹார்ட் ரேட்டை அளவிடுவது எப்படி!

ஓலா நிறுவனத்தின் மீது ஏற்கனவே புகார்கள் இருந்த நிலையில், வாகனம் டெலிவரி செய்யப்பட்ட பலருக்கும் இதே போல பிரச்சனை ஏற்பட்டுள்ளதை பகிரத் தொடங்கினர். மற்றொரு வாடிக்கையாளர் வாகனத்தில் சார்ஜிங் பிரச்சனை இருப்பதை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து புகார்கள் எழும்பி வந்துள்ள நிலையில் அட்வான்ஸ் புக்கிங் செய்த ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய ஆர்டரை கேன்சல் செய்ததாக பகிர்ந்துள்ளார்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Ola