Home /News /technology /

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட்ட 44 மில்லியன் ஸ்மார்ட் போன்கள்!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட்ட 44 மில்லியன் ஸ்மார்ட் போன்கள்!

மேக் இன் இந்தியா திட்டம்

மேக் இன் இந்தியா திட்டம்

இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
 மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பி எல் ஐ திட்டத்தினால் இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள பிஎல்ஐ சலுகைகளைப் பெற, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ஃபோன்களை தயாரிக்க ஒவ்வொரு நிறுவனமும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து தயார் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் கால் பகுதியில் கிட்டத்தட்ட 44 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும் இந்திய அரசாங்கம் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல சலுகைகளை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் இந்த சலுகைகளைப் பெறுவதற்கு பல்வேறு நிறுவனங்களும் குறிப்பிட்டுள்ள அளவில் உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இதனால் உள்ளூரில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களான ஸ்மார்ட் வாட்ச், டி டபிள்யூ எஸ், நெக் பேண்ட் மற்றும் டேப்லட் ஆகியவற்றின் தயாரிப்பும் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதாக இந்திய அரசாங்கம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

Also Read : கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஜூம் நிறுவனம்.. வெளியானது அதிரடி அறிவிப்பு.!

இதில் ஒப்போ நிறுவனம் “மேக் இன் இந்தியா” ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி திட்டத்தில் 24 சதவீத பங்குகளையும், சாம்சங், விவோ மற்றும் லாவா ஆகிய நிறுவனங்கள் 21 சதவீத பங்குகளையும் வைத்துள்ளனர்.

சமீபத்தில் ஓப்போ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “விஹான்” திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 60 மில்லியன் டாலர் பணத்தை அடுத்த ஐந்து வருடத்தில் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கவும் மேலும் அவற்றுக்கான போக்குவரத்திற்காகவும் இந்த 60 மில்லியன் டாலர் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

அதேபோன்று சாம்சங் நிறுவனமும் ப்ரீமியம் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களுக்கான உற்பத்தியை அதிகரித்துள்ளது. முக்கியமாக கேலக்ஸி எஸ் சீரிஸ் வகை ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாக மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் பிராட்சிர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த தரவுகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட 66% ஸ்மார்ட் போன்கள் மற்றும் இதர பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 34 சதவீதங்கள் மூன்றாம் தரப்பு எலக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்றாம் தரப்பு எலக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனங்களில் பாரத் எஃப் ஐ எச், டிக்சான் மற்றும் டி பி ஜி ஆகியவை முன்னிலையில் உள்ளன. ஸ்மார்ட் போன் பாகங்கள் தயாரிப்பில் நட்பு நிதியாண்டின் முதல் கால் பகுதியில் பட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் 396 சதவீதமும், விஸ்டான் 137%, லாவா 110 சதவீதமும் வளர்ச்சியை அடைந்துள்ளது.

Also Read : உபர் நிறுவனத்தின் தகவல்களைத் திருடிய 18 வயது ஹேக்கர் - தனிநபர் தரவுகள் வெளியாகவில்லை என்று உபர் தகவல்!

ஆப்டிமஸ் என்ற நிறுவனம் இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்மார்ட் வாட்ச் அவர்களின் 75 சதவீத பங்குகளை வைத்துள்ளது. டேப்லெட் வகையைப் பொறுத்தவரை முன்னிலையில் உள்ளன. தொலைக்காட்சிகளுக்கான ஏற்றும் அதில் டிக்சான் ரேடியன் சாம்சங் மற்றும் எல்ஜி ஆகியவை 50 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

வரும் வருடங்களில் இந்தியாவை எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பின் மையமாக மாற்றுவதற்கு இந்திய அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. அதற்காக மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா ஆகிய பல்வேறு திட்டங்களை வகுத்து அதற்காகப் பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர் பிரியா ஜோசப் தெரிவித்துள்ளார்.

 
Published by:Janvi
First published:

Tags: Export, Make In India, Smartphone

அடுத்த செய்தி