ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

10 ரூபாயில் நெட்ஃபிளிக்சில் படங்கள் பார்க்கலாம் – வெளியான சூப்பர் அறிவிப்பு

10 ரூபாயில் நெட்ஃபிளிக்சில் படங்கள் பார்க்கலாம் – வெளியான சூப்பர் அறிவிப்பு

நெட்ஃபிளிக்ஸ்

நெட்ஃபிளிக்ஸ்

Netflix | அனைவருக்கும் நெட்ஃபிளிக்ஸ் சென்று சேர வேண்டும் என்ற முனைப்பில், 10 ரூபாய் பாக்கெட் திட்டம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ‘சாஷே சப்ஸ்கிரிப்ஷன்’ என்று கூறப்படுகிறது. இதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலகின் முன்னணியில் இருக்கும் மிகப் பிரபலமான ஓடிடி தளம் நெட்ஃபிளிக்ஸ். இந்தியாவை பொறுத்தவரை கொஞ்சம் காஸ்ட்லியான தளமாகத்தான் பார்க்கப்படுகிறது. மற்ற தளங்களோடு ஒப்பிடும் போது, இதன் விலை காரணமாக பலரும் நெட்ஃபிளிக்ஸ் சந்தா செலுத்துவதற்கு கொஞ்சம் தயங்குகிறார்கள். சிலர் விலை காரணமாகவும் குறிப்பாக, கிராமப்புறவாசிகள் மற்றும் டவுன்களில் வசிப்பவர்கள், நேரமின்மைக் காரணமாகவும் சந்தா செலுத்தியும் படங்கள், நிகழ்ச்சிகள் பார்க்க முறியவில்லை. அனைவருக்கும் நெட்ஃபிளிக்ஸ் சென்று சேர வேண்டும் என்ற முனைப்பில், 10 ரூபாய் பாக்கெட் திட்டம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ‘சாஷே சப்ஸ்கிரிப்ஷன்’ என்று கூறப்படுகிறது. இதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

PayNearBy நிர்வாக இயக்குனர் மற்றும் CEOவான ஆனந்த் குமார் பஜாஜ், ‘நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்று அனைத்து இடங்களிலும் இன்டெர்நெட் டேட்டாவை சாட் செய்வது, சோசியல் மீடியா ஆகியவற்றுக்கு தான் பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மேலும் ஆய்வு செய்த பொழுது, நகரத்தில் வசிப்பவர்கள் ஷாப்பிங், கல்வி, வேலை தேடுவது, மருந்து, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட கூடுதலாக பல்வேறு விஷயங்களுக்கு இன்டெர்நெட் டேட்டாவை செலவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது’ என்று கூறினார்.

‘₹10 க்கு நெட்பிளிக்ஸில் திரைப்படங்கள் என்பதை நினைத்துப் பாருங்கள், நெட்ஃபிளிக்ஸ் சர்வரே முழுவதுமாக கிராஷ் ஆகி விடும். எனவே இதற்கு நாங்கள் என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல் நெட்ஃபிளிக்ஸ் உடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம்’ என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஒரு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கணக்கெடுப்பு மற்றும் டேட்டாவின் அடிப்படையில் இலவசமான OTT தளங்களில் 39% ரூரல் ஏரியாவில் வசிப்பவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற தரவும் வெளியாகியுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் OTT தளம் பயன்பாட்டை மாற்ற வேண்டும் என்றும் அதற்கு ரூரல் ஏரியாக்களில் வசிப்பவர்களில் 20 சதவிகிதமாவது ஓடிடி தளத்துக்கு சந்தா செலுத்தும்படி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இவர்களில் 10% டிஜிட்டல் சார்ந்த எல்லா விஷயங்களும் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.  டிஜிட்டல் சேவைகள் பற்றி  அறிந்தவர்கள் வங்கிக் கணக்கு முதல் ஷாப்பிங் வரை அனைத்தையுமே ஆன்லைனில் செய்வார்கள். எனவே, டிஜிட்டல் மயமாக்கல் துரிதமாக இருக்கும் போது, 90 சதவிகித மக்களை, விரைவாக இந்த திட்டத்தில் இணைக்க முடியும்.

Also Read : உஷார்... வாடிக்கையாளர்களுக்கு Netfilx முக்கிய எச்சரிக்கை

வங்கிக்கிளைகள் இல்லாத பேங்கிங் மற்றும் பிற நிதி சேவைகளை வழங்கும் நிறுவனம் தான் PayNearby. உள்ளூரில் இருக்கும் கிரானா வணிகர்களிடம் டிஜிட்டல் நிதி சேவைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதில் ஒன்று தான் 10 ரூபாய்க்கு நெட்ஃபிளிக்ஸ் திரைப்படம். ஏற்கனவே, திரைப்படத்துக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கும் திட்டம் பல தளங்களில் அமலில் உள்ளது. இது எவ்வளவு தூரம் செயல்படும் என்று பார்க்கலாம்.

First published:

Tags: Netflix, Technology