ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இன்ஸ்டா கிரியேட்டர்களுக்கு குட் நியூஸ்; டிஜிட்டல் பரிசுடன் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு....விரைவில் அறிமுகம்!

இன்ஸ்டா கிரியேட்டர்களுக்கு குட் நியூஸ்; டிஜிட்டல் பரிசுடன் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு....விரைவில் அறிமுகம்!

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

Mashable இன் படி, Facebook, பேஸ்புக் லைவ் மற்றும் ஃபேஸ்புக் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் நேரடியாக தங்கள் பார்வையாளர்களால் பணம் பெறலாம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  இன்றைக்கு சோசியல் மீடியாக்களின் ஆதிக்கத்தில் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைவருக்கும் சிக்கித் தவித்து வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ் அப்பிற்கு அடுத்தப்படியாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய இணையதளம் தான் இன்ஸ்டகிராம். புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள் என பலவற்றைப் பகிரும் தளமாக உள்ளது. குறிப்பாக இன்ஸ்டா ரீல்ஸ்கள் தான் இன்றைக்கு மக்களிடம் அதிகளவில் டிரெண்டாகி வருகிறது. உலகளவில் பல மில்லியன் கணக்கான மக்கள் இன்ஸ்டாவைப் பயன்படுத்தி வந்தாலும் அனைவரும் அதில் ஆக்டிவ்வாக இருப்பதில்லை. அதே சமயம் இன்ஸ்டாவில் வரக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களைப் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் ஒருபுறம் ஏராளமாக உள்ளது.

  இந்நிலையில் தான், மெட்டா நிறுவனம் பயனர்களின் வசதிக்காக இன்ஸ்டாவில் பல்வேறு புதிய அம்சங்களை ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்துவருகிறது. இதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பின் படி, இன்ஸ்டாவில் டிஜிட்டல் சேகரிப்புகளை வர்த்தகம்

  ( trade digital collectibles) செய்வதற்கானக் கருவி உள்பட பல புதிய அம்சங்களை சேர்க்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனவே பல்வேறு வித்தியாசமான கன்டென்ட் வழங்கும் நபர்கள் சோசியல் மீடியா வாயிலாக சம்பாதிக்கலாம் எனவும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

  ஸ்மார்ட்போனில் உள்ள உங்களது டேட்டாவை டவுன்லோடு செய்ய வேண்டுமா.? இதோ எளிய டிப்ஸ் உங்களுக்காக.!

  குறிப்பாக இன்ஸ்டாகிராமிற்குள் நேரடியாக கிரியேட்டர்கள் அல்லாத டோக்கன்களை (NFT- Non fungible tokens) வாங்குவதன் மூலம் யூசர்கள் விரைவில் அவர்களுக்கு ஆதரவளிக்க முடியும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் புதிய "எண்ட்-டு-எண்ட்" கருவித்தொகுப்பைப் பயன்படுத்துவதன் மூலம், படைப்பாளிகள் இப்போது இன்ஸ்டாகிராமில் NFT சேகரிப்புகளை உருவாக்கி, அவற்றை தங்கள் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களின் மூலம் டிஜிட்டல் பரிசுகளைப் பெற்று பணம் சம்பாதிக்கலாம்.

  குறிப்பாக இந்த தளங்களில் ரீல்களுக்கு இடையே ஸ்டார்களின் விளம்பரங்கள் வருவதன் மூலமாகவும் கிரியேட்டரஸ்கள் பணம் சம்பாதிப்பதற்கான கூடுதல் அம்சங்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதோடு 2024 ஆம் ஆண்டு வரை இந்த NFT விற்பனையைக் குறைக்காது எனவும், அதே சமயம் ஆப் ஸ்டோர் செலவுகளை ஈடுகட்ட 30 சதவீத அளவிற்கு அதிலிருந்து வருவாய் கழிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  எனவே யூசர்கள், தங்களுக்குப் பிடித்த ரீல்ஸ்களை உருவாக்குபவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்க டிஜிட்டல் பரிசுகளை அனுப்பலாம். இதன் மூலம் ஒரு படைப்பாளிக்கு ஒரு யூசர்கள் பரிசு வழங்கிய பிறகு, அவர் விலையில் ஒரு பகுதியை பணமாகப் பெற முடியும். இந்த அம்சம் அனைத்து யூசர்கள்களுக்கும் தற்போது கிடைக்காது எனவும், குறைந்த எண்ணிக்கையிலான பீட்டா தற்போது சோதனையில் உள்ளதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

  பெங்களூரு இன்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டில் 5G பிளஸ் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்திய ஏர்டெல்.!

   மேலும் Mashable இன் படி, Facebook, பேஸ்புக் லைவ் மற்றும் ஃபேஸ்புக் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் நேரடியாக தங்கள் பார்வையாளர்களால் பணம் பெற அனுமதிக்கும் ஒரு கருவியான ஸ்டார்ஸ் பயன்பாட்டை பேஸ்புக் நீட்டிப்பதாகவும் மெட்டா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Facebook, Instagram