முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / சூரிய மண்டலம் பற்றி இனி எளிமையாக தெரிந்து கொள்ளலாம் – கூகுள் மற்றும் நாசாவின் புதிய முயற்சி!

சூரிய மண்டலம் பற்றி இனி எளிமையாக தெரிந்து கொள்ளலாம் – கூகுள் மற்றும் நாசாவின் புதிய முயற்சி!

சூரிய குடும்பம்

சூரிய குடும்பம்

கிரகங்களைப் பற்றி தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் பற்றிய தெளிவான புரிதல் மற்றும் டெலஸ்கோப் எவ்வாறு செயல்படுகிறது என்பது இன்று முழுமையாக தெரிந்து கொள்வதற்கும் இது உதவும்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

நமக்கு ஏதேனும் ஒரு விவரம் தேவை என்றால் கூகுள் தேடலில் பயன்படுத்தி தெரிந்து கொள்வோம். உள்ளங்கையில் உலகம் என்பதை கூகுள் சர்ச் உறுதிப்படுத்தி இருக்கிறது. எந்த விவரம் தேவை என்றாலும் கூகுள் தேடலில் அதை எளிதாக நம்மால் கண்டுபிடிக்க முடியும்.அனைவருக்கும் பலன் அளிக்கும் வகையில், விண்வெளி சார்ந்த விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கும் கூகுள் தேடல் ஒரு புதிய முயற்சியை செய்துள்ளது.

செயற்கைகோள், விண்வெளி, கிரகங்கள், சூரிய மண்டலம் என்று இவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். பள்ளிகளில் இதைப் பற்றிய அடிப்படை விஷயங்களை மட்டுமே படிப்பார்கள். இருப்பினும் இவற்றின் மீது விருப்பம் கொண்டவர்கள் அடுத்தடுத்து படிக்க வேண்டும் என்று விருப்பம் கொள்வார்கள். செயற்கை கோள் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் முன்னோடியாக இருக்கும் நாசா கூகுள் உடன் கைகோர்த்துள்ளது. விண்வெளி பற்றிய கல்வியை ஒரு விருப்பமாக எளிமையாக வழங்க கூகுள் மற்றும் நாசாவும் சேர்ந்து திட்டமிட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

நாசாவுடன் கூகுள் இது இணைவது முதல் முறை கிடையாது ஏற்கனவே நாசா மற்றும் கூகுள் பல திட்டங்களில் கைகோர்த்து செயல்பட்டுள்ளனர். இந்த முறை நம்முடைய சூரிய மண்டலத்தை 3D டைமன்ஷனில் தெரிந்து கொள்வதற்கான ஒரு புதிய பரிமாணத்தை கூகுள் மற்றும் நாசா வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.ஏற்கனவே கூகுள் தேடலில் இந்த விவரங்கள் இன்டராக்டிவ் எலிமென்ட்டாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம்முடைய பால் வீதியில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றன என்பதை பற்றிய முழுமையான விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக நாசா விண்வெளிக்கு அனுப்பிய விண்கலங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன.கிரகங்களைப் பற்றி தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் பற்றிய தெளிவான புரிதல் மற்றும் டெலஸ்கோப் எவ்வாறு செயல்படுகிறது என்பது இன்று முழுமையாக தெரிந்து கொள்வதற்கும் இது உதவும்.

அதுமட்டும் இல்லாமல் சர்வதேச விண்வெளி மையம் எவ்வாறு அமைக்கப்பட்டது என்பது முதல் அதன் செயல்பாடுகள், வரை அனைத்து விவரங்களையும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள், விண்கலங்கள் ஆகியவற்றை புதிய த்ரீ டைமன்ட்ஷனில் கூகுள் சேர்ச்சில் வழங்க, நாசாவுடன் கைகோர்த்து இருப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாக கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ட்வீட் செய்துள்ளார். Googlearts என்ற திட்டம் வழியாக நம் சூரிய மண்டலத்தை எக்ஸ்ப்ளோர் செய்ய உதவும் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் கணினியிலோ அல்லது உங்களுடைய ஸ்மார்ட் ஃபோனிலோ நீங்கள் இந்த விவரங்களைப் பற்றி கூகுள் சர்ச்சில் தேடும்போது, 3D விளைவில் நீங்கள் தேடியதற்கான விவரங்கள் காண்பிக்கப்படும்.

Read More: இன்ஸ்டாகிராமில் பிரபலமா நீங்கள்...? உங்களுக்காகவே புதிய அப்டேட் அறிவித்த மெட்டா

top videos

    பலவித சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வு பற்றி படிப்பதற்கும், அதனை தேர்வு செய்வதற்கும் பல மாணவர்கள் முன்வருவார்கள் என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Google, Space, Technology