இந்த அண்டத்தில் உள்ள பால்வெளி மண்டலம் போன்ற பலதரப்பட்ட நட்சத்திர கூட்டங்களை காண ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி(JWST) பேருதவி புரிகிறது. இந்த தொலைநோக்கியில் எடுக்கப்பட்ட படங்கள் பார்ப்பதற்கு கண்களே பத்தாது என்று சொல்லும் அளவு அற்புதமாக இருக்கும்.
ஆனால் இதை காண முடியாமல் இருக்கும் பார்வையற்றவர்களின் கற்பனையில் விண்வெளியின் படங்களை சேர்க்க நாசா 1 புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. பார்வையற்றோருக்காக, தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) விஞ்ஞானிகள் குழு சில இசைக்கலைஞர்கள் மற்றும் பார்வையற்ற சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து தொலைநோக்கிப் படங்களின் தரவை ஒலிபடமாக்குவதற்கு முயற்சித்து வருகிறது.
கரினா நெபுலா மற்றும் தெற்கு வளைய நெபுலாவின் முதல் முழு வண்ணப் படங்களின் இரண்டு காட்சிகளை ஒலியில் படமாக்கப்பட்டுள்ளன, இரண்டும் தனித்தனி டோன்களைக் கொண்டிருப்பதால் கேட்போர் வெவ்வேறு படங்களை வேறுபடுத்திக் கேட்க முடியும்.
தாஜ்மஹாலை 'தேஜோ மஹாலயா' என்று பெயர் மாற்ற ஆக்ரா நகர சபையில் முன்மொழியும் பாஜக!
"வெப்பின் படங்கள் மற்றும் தரவுகளை ஒலி மூலம் புரிந்துகொள்ள வைப்பதே எங்கள் குறிக்கோள் - கேட்பவர்களுக்கு அவர்களின் சொந்த மனப் படங்களை உருவாக்க உதவுகிறது," என்று திட்டத்தில் ஈடுபட்டுள்ள இசைக்கலைஞர் மாட் ருஸ்ஸோ கூறினார்.
பயன்படுத்தப்படும் நுட்பம்…
சோனிஃபிகேஷன் நுட்பத்தைப் பயன்படுத்தி வெப் தொலைநோக்கி கைப்பற்றிய அகச்சிவப்பு ஒளி படங்களிலிருந்து நிறங்களின் அடர்த்திக்கு ஏற்ற ஒலியைப் பயன்படுத்தி இந்த ஒலிப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.
கரினா நெபுலாவின் ஒலி
கரினா நெபுலாவில் உள்ள அரை-வெளிப்படையான, ஒளிஊடுருவக்கூடிய பகுதிகள், வாயு மற்றும் தூசியின் மிகவும் அடர்த்தியான பகுதிகளுக்கு தனித்துவமான ஒலிக் குறிப்புகளை இசைக்கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
கரினா நெபுலாவின் சோனிஃபிகேஷனில், படத்தின் மேற்புறத்தில் உள்ள பிரகாசமான ஒளி இருக்கும் இடங்களுக்கு உரத்த ஒலிகள் மற்ற இடங்களுக்கு மென்மையான ஒலி சேர்க்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. தெளிவான, சிதைக்கப்படாத குறிப்புகள் படத்தில் குறைவாக வெளிப்படும் மங்கலான, தூசி-தெரியாத பகுதிகளை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.
தெற்கு வளைய நெபுலாவின் ஒலி
சதர்ன் ரிங் நெபுலாவின் இரண்டு காட்சிகளின் சொனிஃபிகேஷனில், படங்களில் உள்ள வண்ணங்கள் ஒலியின் சுருதிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. ஒளி அலைகளின் அதிர்வெண்கள் நேரடியாக ஒலியின் அதிர்வெண்களாக மாற்றப்படுகின்றன.
“இந்த புதிய முயற்சி, பார்வையற்றவர்கள் அல்லது குறைந்த பார்வை உள்ளவர்கள் தகவல்களை எவ்வாறு வித்தியாசமாக அணுகுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த அனுபவம் உதவியது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.