ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அடி தூள்..! இனி ஒரே வாட்ஸ் அப்பை இரண்டு டிவைஸ்களில் பயன்படுத்தலாம்..!

அடி தூள்..! இனி ஒரே வாட்ஸ் அப்பை இரண்டு டிவைஸ்களில் பயன்படுத்தலாம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நீங்கள் உங்களது மொபைல் போனிலிருந்தே எத்தனை டிவைஸ்களில் உங்கள் வாட்ஸ் அப் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது கண்டறிய முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் முன்னிலையில் இருப்பது வாட்ஸ் அப் செயலியாகும். தகவல்களை பரிமாறக் கொள்ள உதவும் இந்த செயலியில் மெட்டா நிறுவனம் அவ்வபோது புதிய புதிய அப்டேட்டுகளை கொடுத்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது. சமீபத்தில் குரூப் வீடியோ கால், வாட்ஸ் அப் கம்யூனிட்டி, குழுவாக கால் பேசும் போது தனிப்பட்ட நபரை மியூட் செய்யும் வசதி போன்ற பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அது போலவே தற்போதும் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரே எண்ணில் இயங்கும் வாட்ஸ் அப்பை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு டிவைஸ்களில் பயன்படுத்த முடியும்.

இது போல ஒரு வசதி ஏற்கனவே வாட்ஸ் அப்பில் இருந்தாலும், அதனை சற்று விரிவுபடுத்தி புதிய அம்சங்களை சேர்த்து ஒரு சரியான பேக்கேஜாக கொடுத்துள்ளது அந்நிறுவனம். ஒரே எண்ணில் இயங்கும் வாட்ஸ் அப்பை தற்போது நம்மால் இரண்டு வெவ்வேறு மொபைல்களில் பயன்படுத்த முடியும். வாட்ஸ் அப்பில் லிங்க் டிவைசஸ் என்ற வசதியின் புதிய விரிவாக்கமாக இது உள்ளது.. மேலும் எத்தனை டிவைஸ்களில் உங்கள் வாட்ஸ் அப் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் உங்களால் பார்க்க முடியும்.

இதில் உள்ள இன்னொரு வசதி என்னவெனில் உங்களுக்கு தெரியாமல் உங்களது வாட்ஸ் அப்பை வேறு யாருமே பயன்படுத்த முடியாது. ஒருவேளை யாரேனும் பயன்படுத்தினால் உங்களது டிவைஸில் உள்ள ஆக்டிவ் லிஸ்டில் எந்த மொபைல் அல்லது கணினியில் உங்களது வாட்ஸ் அப் ஆக்டிவாக உள்ளது என்பதை உங்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். இதைத் தவிர எங்கிருந்தாலும் உடனடியாக உங்களது வாட்ஸ் அப்பை மற்ற டிவைஸ்களில் இருந்து லாக் அவுட் செய்யும் வசதியும் உள்ளது.

இந்த புதிய வசதி மூலம் உங்களது மொபைல் போன தவிர மற்ற நான்கு டிவைஸ்களில் வாட்ஸ் அப்பை உங்களால் பயன்படுத்த முடியும். அது லேப்டாப், டேப்லட் அல்லது வேறு ஒரு மொபைல் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வாட்ஸ் அப்பை எவ்வாறு இரண்டு வெவ்வேறு மொபைல் போன்களில் பயன்படுத்துவது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

முதலில் வாட்ஸ் அப் செயலியை ஓபன் செய்து கொண்டு மேல் புறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
அதில் லிங்க்டு டிவைஸஸ் சென்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இப்போது ஒரு புதிய பக்கம் திறந்து லிங்க் டிவைஸ் என்ற ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது நீங்கள் எந்த மொபைல் அல்லது டேப்லெட் உடன் உங்களது வாட்ஸ் அப்பில் இணைக்க விரும்புகிறீர்களோ அந்த டிவைஸை வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
அந்த இரண்டாவது டிவைஸில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து டெர்ம்ஸ்ஆண்டு கண்டிஷன்ஸ் என்பதற்கு டிக் கொடுக்க வேண்டும்.
பிறகு உங்களது மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய சொல்லி பக்கம் தோன்றும்.
அதன் மேல் பக்கம் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஆப்ஷனை தேர்வு செய்து லிங்க் டிவைஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இப்போது உடனடியாக கியூ ஆர் கோடு கொண்ட ஒரு பக்கம் திரையில் தோன்றும்.
ஏற்கனவே வாட்ஸ் அப் செயலி இயங்கிக் கொண்டிருக்கும் உங்களது மொபைல் போனில் லிங்க் டிவைஸ் என்ற ஆப்ஷனை கொடுத்து இரண்டாவது மொபைலில் காண்பிக்கப்படும் கியூஆர் கோடு ஸ்கேன் செய்ய வேண்டும்.
அவ்வளவுதான் உங்களது வாட்சப் கணக்கை இப்போது நீங்கள் இரண்டு டிவைஸ்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
First published:

Tags: Technology, Trending, WhatsApp