இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் எல்லாவற்றையும் விரைவாக பெற வேண்டும் என்று நினைப்போம். இது நாம் பயணம் செய்ய கூடிய ஆட்டோ, கார்கள் என எல்லாவற்றிற்கும் பொருந்தும். இதற்கு ஏற்றது போல இந்த நவீன தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது என்றே சொல்லலாம். நாம் எங்கு செல்ல வேண்டுமென்றாலும், ஒரு ஆப்-ஐ சொடுக்கினால் போதும். நம் பயணத்திற்கான வண்டியை ஏற்பாடு செய்து விடலாம். இதில் பயணத்தை ஏற்கும் முன் ஓட்டுநர்கள் எவ்வளவு சம்பாதிப்பார்கள், எங்கு செல்கிறார்கள் என்பதை உபெர் நிறுவனம் காண்பிக்கப் போகிறது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உபெர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தாரா கோஸ்ரோஷாஹி இது குறித்து கூறுகையில், 'முன்பக்க கட்டணங்கள்' (Upfront Fares) மூலம், ஓட்டுநர்கள் சவாரிகளை ஏற்கும் விதத்தை நிறுவனம் முழுமையாக மறுவடிவமைத்துள்ளது என்று தெரிவித்து கொண்டார். மேலும் "புதிய பயணக் கோரிக்கைத் திரையில், டிரைவர்கள் எவ்வளவு சம்பாதிப்பார்கள் அவர்கள் எங்கு செல்கிறார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் வழங்குவதன் மூலம், பல வகையில் இது மேம்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கும்" என்று கோஸ்ரோஷாஹி கூறினார்.
அதே போன்று உபெர் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சில நகரங்களில் இது குறித்த முன்னோட்டக் கட்டணங்களை பரிசோதனை செய்து பார்த்தது. இதில் கூடுதலாக தந்துள்ள 'டிரிப் ரேடார்' எனப்படும் மற்றொரு அம்சம், அருகில் நடக்கும் மற்ற பயணங்களின் பட்டியலை டிரைவர்கள் பார்க்க உதவுகிறது. அதன்படி, டிவைர்கள் முன்பைப் போலவே தனிப்பட்ட பயணக் கோரிக்கைகளைப் பெறுவார்கள், ஆனால் டிரிப் ரேடார் மூலம் சிறப்பாகச் செயல்படக்கூடிய மற்றொரு பயணத்தைத் தேர்ந்தெடுக்கும் திறனும் அவர்களுக்கு உள்ளது" என்று கோஸ்ரோஷாஹி தெரிவித்தார்.
இந்த டிரிப் ரேடார் அம்சமானது அடுத்த சில மாதங்களில் முன்பணக் கட்டணங்களுடன் விரிவடையும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்புகளை குறித்து வாஷிங்டன் டி.சி-யில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுனர்களுக்கு நேரில் தெரிவிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக உபெர் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். மேலும், உபெர் நிறுவனம் மாஸ்டர் கார்டு, பிரான்ச் மற்றும் மார்க்கெட்டா ஆகியவற்றுடன் புதிய உபெர் ப்ரோ டெபிட் கார்டு மற்றும் செக்கிங் அக்கவுண்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது, இது ஓட்டுநர்களுக்கு எரிவாயு, கட்டணம் மற்றும் பலவற்றைச் சேமிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read : உங்கள் உபர் ரைடு கேன்சல் ஆகிறதா.. இனி அப்படி நடக்காது..!
ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் ஓட்டுநர்களின் வருமானம் "இலவசமாக" அவர்களின் உபெர் ப்ரோ கார்டு கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். வருகின்ற நவம்பரில், உபெர் ப்ரோ திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஆண்டுதோறும் டயமண்ட் நிலையில் உள்ள சிறந்த டிரைவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக உபெர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.