இனி பாதுகாப்பான சேட்டிங் - புதிய அம்சங்களை கொண்டுவரும் வாட்ஸ்அப்!

WhatsApp |அனுப்பிய செய்தியை டெலிட் செய்யும் வசதிக்கு பயனர்கள் பெரும் வரவேற்பு அளித்த நிலையில், அடுத்த கட்டமாக பல அம்சங்களை வாட்ஸ்அப் அளிக்க உள்ளது.

இனி பாதுகாப்பான சேட்டிங் - புதிய அம்சங்களை கொண்டுவரும் வாட்ஸ்அப்!
வதந்திகளை தடுக்க நடவடிக்கை!
  • News18
  • Last Updated: October 29, 2018, 6:04 PM IST
  • Share this:
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்காக, லாகின் செய்யும்போது முக அடையாளம், கைரேகை போன்ற பாதுகாப்பு முறைகளை கொண்டுவர உள்ளது.

தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப், சந்தையில் தனக்கிருக்கும் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு அம்சங்களை களமிறக்கி வருகிறது. பயனாளர்களின் கோரிக்கைக்களுக்கு செவிசாய்த்து, அனுப்பிய செய்தியை டெலிட் செய்யும் வசதி உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டது.

இரவிலும் பயனர்கள் கண்கூசாமல் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்த டார்க் மோட் (Dark Mode) வசதி, ஸ்டிக்கர்கள், செயலியை திறக்காமலேயே ரிப்ளை செய்யும் வசதி உள்ளிட்டவை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. பயனாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மேலும் பல அம்சங்களை வாட்ஸ்அப் கொண்டுவர உள்ளது.


முக அடையாளம், கைரேகை ஆகியவற்றைக் கொண்டு வாட்ஸ்அப்-ஐ லாகின் செய்யும் வசதிகளை கொண்டு வர உள்ளது. தற்போது ஆரம்பகட்ட பரிசோதனையில் இருக்கும் இந்த அம்சங்கள், முதலில் ஐ.ஓ.எஸ் ஓஎஸ் பயன்படுத்துபவர்களுக்கும், பின்னர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் தங்களது முக அடையாளம், கைரேகை ஆகியவற்றை முன் கூட்டியே பதிவு செய்து விட்டால், அவர்கள் மட்டுமே தங்களது முகத்தை காட்டியோ, கைரேகை வைத்தோ செயலியை லாகின் செய்ய இயலும். சில நேரங்களில் முக அடையாளத்தையோ, கைரேகையையோ செயலி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் 6 இலக்க பாஸ்வேர்டு கொண்டு உள்ளே நுழையலாம். இந்த பாஸ்வேர்டையும் பயனர்களே வைத்துக்கொள்ளலாம்.

ஐபோன் பயன்படுத்துபவர்கள் ஐ.ஓ.எஸ் 8 அல்லது அதற்குப் பிறகு வந்த ஓஎஸ் இருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்களுக்கு விரைவில் இதற்கான அப்டேட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.மேலும் செய்திகள்..

தீபாவளி சிறப்புச் சலுகை: 10 ஜி.பி டேட்டா அள்ளித்தரும் ஜியோ!

சர்கார் படத்திற்கு ரெட் கார்ட்?... தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த அதிரடி புகார்

Also See..

First published: October 29, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading