Home /News /technology /

விரைவில் அறிமுகமாக உள்ள Nothing Phone (1) ஸ்மார்ட் ஃபோனின் விலை.? எந்த மொபைல்களுக்கு போட்டியாக இருக்கும்.?

விரைவில் அறிமுகமாக உள்ள Nothing Phone (1) ஸ்மார்ட் ஃபோனின் விலை.? எந்த மொபைல்களுக்கு போட்டியாக இருக்கும்.?

Nothing Phone

Nothing Phone

Nothing Phone 1 | "ஒன்றுமில்லை" என்று பொருள்படும் ஆங்கில வார்த்தையான Nothing என்ற வார்த்தையை வைத்து ஸ்மார்ட் ஃபோன் அறிமுகமாக உள்ளது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தொற்று காலத்தில் ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்ததால், சமீப மாதங்களாக முன்னணி மொபைல் பிராண்டுகள் அதிக அளவில் புது புது மாடல்களை தொடர்ந்து ரிலீஸ் செய்து வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தை தளமாக கொண்ட ஸ்மார்ட் போன் பிராண்டான் நத்திங், அதன் முதல் ஸ்மார்ட் ஃபோனான நத்திங் ஃபோன் (1)-ஐ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

    "ஒன்றுமில்லை" என்று பொருள்படும் ஆங்கில வார்த்தையான Nothing என்ற வார்த்தையை வைத்து ஸ்மார்ட் ஃபோன் அறிமுகமாக உள்ளது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எப்படி சில ஹோட்டல்கள் மற்றும் கடைகளுக்கு வித்தியாசமாக பெயர் வைத்து மக்களை கவர்ந்து இழுக்கிறார்களோ அதே போல நத்திங் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள Nothing Phone (1)-ம் அறிமுகமாவதற்கு முன்பே மக்களிடையே அதிகம் பேசப்படும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.

    வரும் ஜூலை 12-ல் அறிமுகமாக உள்ள நத்திங் ஃபோன் (1)-ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் சிப்செட்டுடன் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நத்திங் ஃபோன் (1) எந்த விலை செக்மென்டில் வெளியாகும் என்பதற்கான ஒரு ஹின்ட்டை கொடுத்துள்ளது. ஒருவேளை நத்திங் ஃபோன் (1) ரூ.30,000-க்கும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியமில்லை. மேலும் நத்திங் ஃபோனை (1) விற்பனையின் போது மேலும் பிரபலமாக்க அறிமுகச் சலுகைகளோடு சேர்த்து சுமார் ரூ. 25,000 என்ற விலையில் இந்தியாவில் விற்கப்பட கூடும். தற்போது மோட்டோரோலாவின் மோட்டோ எட்ஜ் 30 5G மட்டுமே Qualcomm Snapdragon 778G பிளஸ் சிப்செட்டுடன் இந்திய சந்தையில் விற்கப்படுகிறது. இதன் விலை ரூ.29,999 .



    குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G VS ஸ்னாப்டிராகன் 778G பிளஸ்:

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் என்பது, ஸ்னாப்டிராகன் 778ஜியின் அப்டேட் வெர்ஷனாகும். 2 சிப்செட்களும் Qualcomm-ன் நான்காம் தலைமுறை மொபைல் சிப்கள் அதே Kryo 670 கட்டமைப்பில் அதே 6nm ப்ராஸசில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டுமே ஒரே அளவு கோர்கள் மற்றும் த்ரெட்களை கொண்டிருந்தாலும் ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் ஹை ஃப்ரீக்வென்ஸியில் க்ளாக் செய்யப்படுகிறது. அதாவது ஸ்னாப்டிராகன் 778G-ஐ விட இது வேகமானது. க்ளாக்கிங் தான் 2 சிப்செட்களுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு ஆகும், ஏனெனில் அவை இரண்டும் ஒரே GPU, ஒத்த கோடெக்ஸ், அதிகபட்ச ரேம் திறன் மற்றும் பலவற்றில் ஒரே மாதிரி உள்ளன. நத்திங் ஃபோன்(1) எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள இங்கே Qualcomm Snapdragon 778G சிப்செட்டில் இயங்கும் சில ஸ்மார்ட் ஃபோன்களை பார்க்கலாம்...

    Also Read : ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை

    விவோ டி1 ப்ரோ 5ஜி:

    ரூ.23,999 முதல் கிடைக்கும் இந்த மொபைல் 6.44-இன்ச் ஃபுல் -HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது ஆக்டா-கோர் Qualcomm Snapdragon 778G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8GB வரை ரேம் மற்றும் 128GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன், 4,700mAh பேட்டரி கொண்டுள்ளது.



    ரியல்மி 9 எஸ்இ 5ஜி:

    இதன் விலை ரூ.19,999 மற்றும் 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. ஸ்னாப்டிராகன் 778G சிப்செட்டுடன் வரும் இந்த மொபைல் மேலும் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் 5000mAh பேட்டரியை பெற்றுள்ளது.

    Also Read : ரூ.75,000-க்குள் உங்களுக்கு கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள்.!

    ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்:

    இந்தியாவில் இதன் விலை ரூ.25,999. Realme GT Master Edition ஆனது 6.43-inch ஃபுல்-HD+ Super AMOLED டிஸ்ப்ளே மற்றும் 360Hz டச் சேம்ப்ளிங் ரேஷியோவை கொண்டுள்ளது. Qualcomm Snapdragon 778 SoC மூலம் இயங்கும் இந்த மொபைல் 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜுடன் கிடைக்கிறது. இது 4,300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    மேற்காணும் மொபைல்களை தவிர IQOO Z6 PRO, SAMSUNG GALAXY A73 5G, XIAOMI 11 LITE NE 5G உள்ளிட்ட டிவைஸ்களும் Qualcomm Snapdragon 778G சிப்செட்டில் இயங்குகின்றன.
    Published by:Selvi M
    First published:

    Tags: Mobile phone, Smartphone, Technology

    அடுத்த செய்தி