பல டீஸர்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு பிறகு, இந்தியா உட்பட உலகளவில் நத்திங் ஃபோன் (1) (Nothing Phone 1) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. லண்டனை தளமாக கொண்ட நத்திங் நிறுவனத்தின் இந்த முதல் ஸ்மார்ட்ஃபோன், Nothing Phone (1) வெளிப்படையான பேக் பேனலுடன் வித்தியாசமான வடிவமைப்பை கொண்டுள்ளது.
இதன் நிறுவனர் Carl Pei-ன் புதிய நுகர்வோர் தொழில்நுட்ப பிராண்டான நத்திங் அதன் முதல் ஸ்மார்ட் போனை நத்திங் ஃபோன் (1) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியதன் மூலம் அதிகாரப்பூர்வமாக ஆண்ட்ராய்டு மொபைல் சந்தையில் நுழைந்துள்ளது. முன்னதாக Carl Pei கடந்த 2013-ல் Pete Lau உடன் இணைந்து OnePlus பிராண்டைத் தொடங்கினார். பின் 2020 -ல் இவர் OnePlus-லிருந்து வெளியேறி நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு Nothing Ear (1) earbuds ஆகும்.
புதிய நத்திங் ஃபோன் (1) பற்றி பேசுகையில், இது ரூ.32,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ரூ.40,000க்கு கீழ் உள்ள மிட்-ரேஞ்ச் செக்மென்ட் தயாரிப்பாக உள்ளது. தனித்துவமான LED-லைட்டிங் மற்றும் வெளிப்படையான பேக் பேனலுடன் மற்ற மொபைலைகளை விட வேறுபட்டு இருக்கிறது.
இந்தியாவில் இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை:
இந்தியாவில் Nothing Phone 1-ன் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.32,999 ஆகவும், 8GBரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.35,999 ஆகவும், 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.38,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 21 முதல் Flipkart-ல் விற்பனைக்கு வரும் இந்த மொபைல் பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
Also Read : ஹேக்கர்களிடம் எஸ்கேப்பாக ஆப்பிள் ஐபோனின் சூப்பர் ஐடியா.!
இதனிடையே ஃபோனை முன்கூட்டிய ஆர்டர் செய்தவர்களுக்கு ரூ. 31,999 (8GB+128GB), ரூ. 34,999 (8GB+256GB), மற்றும் ரூ. 37,999 (12GB+256GB) என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கும். ப்ரீபுக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு நத்திங் ஃபோன் 1-ல் சில சலுகைகளையும் நிறுவனம் வழங்குகிறது. சலுகைகளில் HDFC இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் ரூ. 2,000, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் பம்ப்-அப் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்டவை அடக்கம். மற்ற ஆஃபர்களில் 45W பவர் அடாப்டர் மற்றும் நத்திங் இயர் 1 TWS இயர்போன்களின் உண்மையான விலையில் ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படும்.
Nothing Phone (1)-ன் ஸ்பெசிஃபிகேஷன்கள்:
இந்த ஸ்மார்ட்ஃபோன் 6.55 இன்ச் நெகிழ்வான OLED டிஸ்ப்ளேவுடன் FHD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் கூடிய OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோனின் பின்புறமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12-ஐ கொண்டுள்ளது. மற்ற டிஸ்பிளே அம்சங்களில் HDR10+ சப்போர்ட், 402 ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 1,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவை அடங்கும். மேலும் இந்த டிவைஸ் 12GB வரை LPDDR5 ரேமுடன் இணைக்கப்பட்ட Snapdragon 778G+ சிப்செட்டுடன் வருகிறது.
Also Read : உங்கள் வாழ்வை எளிமையானதாக மாற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் வசதிகளை தவற விடாதீர்கள்.!
ஃபோனின் பின்புறத்தில் இரண்டு 50MP சென்சார்கள், ஒரு மெயின் சென்சார் மற்றும் ஒரு அல்ட்ராவைட் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டூயல் கேமரா செட்டிங் உள்ளது. முதல் 50MP சென்சாரானது Sony IMX766 சென்சார் ƒ/1.88 அப்பெர்ச்சர் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் OIS மற்றும் EIS இமேஜ் ஸ்டெபிளைசேஷனுடன் வருகிறது. இரண்டாவது 50MP சென்சார் சாம்சங் JN1 மற்றும் இது ƒ/2.2 அப்பெர்ச்சர் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது EIS இமேஜ் ஸ்டெபிளைசேஷன், 114 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் மேக்ரோ மோட் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த ஃபோன் பனோரமா நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், சீன் டிடெக்ஷன், எக்ஸ்ட்ரீம் நைட் மோட் மற்றும் எக்ஸ்பர்ட் மோட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் செய்ய ஏதுவாக முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் Sony IMX471 சென்சார், ƒ/2.45 அபெர்ச்சர் லென்ஸுடன் கூடிய கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோனில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, 4G LTE, Wi-Fi 6, Wi-Fi 6 Direct, Bluetooth v5.2, NFC, GPS/A-GPS, GLONASS, GALILEO, QZSS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்ஃபோன் 33W வயர்டு சார்ஜிங், 15W Qi வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.