Home /News /technology /

Nothing phone 1: ஜூலை 12 ஆம் தேதி அறிமுகமாகும் நத்திங் போன் 1 - சிறப்பம்சங்கள் என்னென்ன.?

Nothing phone 1: ஜூலை 12 ஆம் தேதி அறிமுகமாகும் நத்திங் போன் 1 - சிறப்பம்சங்கள் என்னென்ன.?

Nothing Phone 1

Nothing Phone 1

Nothing Phone 1 | நத்திங் போனை வெளியிடுவதற்கு 'ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட்' எனப்படும் மெய்நிகர் நிகழ்வு இரவு 8.30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கி அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    எப்படி ஆப்பிள் போனின் பெயரை கேட்டதும் நம் எல்லோருக்கும் ஒரு வித உணர்வு வருமா, அதை போன்ற உணர்வு சில வகையான பிராண்ட் போன்களில் மட்டுமே கிடைக்கிறது. அப்படியொரு உணர்வை தர வேண்டும் என்பதற்காகவே 'நத்திங்' என்கிற பெயரை புதிதாக வெளியாக உள்ள ஸ்மார்ட்போன் ஒன்றிற்கு வைத்துள்ளனர். இந்த போனை பற்றிய பேச்சு சில காலமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நத்திங் ஃபோன் 1 ஜூலை 12 அன்று வெளியாகும் என்று அந்நிறுவனம் கடந்த புதன்கிழமை உறுதிப்படுத்தி உள்ளது.

    ஒன்பிளஸ்-இன் இணை நிறுவனரான கார்ல் பெய் அவர்களின் தலைமையிலான யு.கே பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் லண்டனில் ஒரு மெய்நிகர் நிகழ்வின் மூலம் வெளியிடப்படும் என்றும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேனல்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நத்திங் ஃபோன் 1 ஆனது வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டதாக கூறப்படுகிறது. இது இந்தியாவில் பிளிப்கார்ட் தளம் வழியாக விற்பனைக்கு வர கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் மூலம் இயங்கும். அதே போன்று இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் SoC சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த புது வகை நத்திங் ஃபோன் 1 ஜூலை 12 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வந்தவுடன் பலரின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நத்திங் போனை வெளியிடுவதற்கு 'ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட்' எனப்படும் மெய்நிகர் நிகழ்வு இரவு 8.30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கி அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்துள்ளனர். மேலும், நத்திங் என்கிற இணையதளத்தில் நிகழ்வைப் பற்றிய அறிவிப்புகளைப் பெற ஆர்வமுள்ள பயனர்கள் இதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.



    இதற்கான அறிமுகத்திற்கான ஊடக அழைப்புகளையும் இந்த பிராண்ட் அனுப்பியுள்ளது. இந்த நத்திங் போனின் விலை விவரங்கள் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (@heyitsyogesh) என்பவர் தனது ட்வீட் மூலம், போன் உள்நாட்டில் தயாரிக்கப்படும் என்றும், இதனால் செலவைக் கட்டுப்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார். எனவே, நத்திங் போன் 1-இன் தயாரிப்பு விரைவில் இந்தியாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்கு முன்னதாக, இங்கிலாந்தை தளமாகக் கொண்ட எலக்ட்ரானிக்ஸ் பிராண்ட் அதன் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய பல விவரங்களை வெளியிட்டுள்ளது. மிக சமீபத்தில், நத்திங் போன் 1 ஆனது உண்மையான வயர்லெஸ் இயர்பட்கள் போன்ற வெளிப்படையான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் வெளியிட்ட உள் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் SoC சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது புது வகையான நத்திங் ஓஎஸ்-இல் இயங்க உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Also Read : Gpay, Paytm, PhonePe பயன்படுத்துகிறீர்களா.? உங்களை பண மோசடியிலிருந்து தடுக்க உதவும் டிப்ஸ்கள் இதோ!

    மேலும் இதற்கான பிரத்யேக லேண்டிங் பக்கத்தை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது. நத்திங் ஃபோன் 1 பற்றிய சிறப்பம்சங்கள் பலவும் சில காலமாக கசிந்து வருகிறது. இது 1,080x2,400 பிக்சல்கள் அம்சத்துடன், 6.55-இன்ச் OLED டிஸ்ப்ளே வசதியுடன் வரலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதன், டிஸ்ப்ளே பேனலில் தட்டையான விளிம்புகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த மேலும் பல தகவல்களை வரும் நாட்களில் அறிந்து கொள்ள முடியும்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Smartphone, Technology

    அடுத்த செய்தி