Home /News /technology /

அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே அமோக வரவேற்பை பெற்றுள்ள Nothing Phone - ஒரு லட்சம் யூனிட்டிற்கு மேல் விற்பனை.!

அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே அமோக வரவேற்பை பெற்றுள்ள Nothing Phone - ஒரு லட்சம் யூனிட்டிற்கு மேல் விற்பனை.!

நத்திங் ஃபோன் (1)

நத்திங் ஃபோன் (1)

Nothing Phone (1) | அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே தனது லாஞ்சிங் பார்ட்னர் Flipkart-உடன் சேர்ந்து Nothing நிறுவனம் Phone (1)-ன் விற்பனையில் அதிக எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
2 மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் ஃபோன் (1) இந்தியாவில் வலுவான விற்பனையை பதிவு செய்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே தனது லாஞ்சிங் பார்ட்னர் Flipkart-உடன் சேர்ந்து Nothing நிறுவனம் Phone (1)-ன் விற்பனையில் அதிக எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

இந்தியா போன்ற அதிக போட்டி நிறைந்த மொபைல் மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகி உள்ள Nothing Phone (1)-ற்கு கிடைத்துள்ள வரவேற்பு வளர்ச்சி பிற நிறுவனங்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. ஏனென்றால் இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் ரூ.30,000 பட்ஜெட் செக்மென்ட்டில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் விட Nothing Phone (1) அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் பேசிய Nothing India நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளரான மனு ஷர்மா, கடந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்தியாவில் Nothing Phone (1), சுமார் 1,00,000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. Flipkart-ல் வெறும் 20 விற்பனை நாட்களில் 1 லட்சம் யூனிட்களுக்கும் மேல் விற்கப்பட்டுள்ளன என்று கூறினார். இதனை தொடர்ந்து Flipkart-ல் தற்போது ரூ. 30,000+ விலை பிரிவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் Nothing Phone (1) தான் என்று மனு ஷர்மா கூறி இருக்கிறார்.



மேலும் பேசிய இவர், நிறுவனம் விரைவில் அதன் நான்காவது பெரிய சாப்ட்வேர் அப்டேட்டான Nothing OS 1.1.4. -ஐ வெளியிடவுள்ளதாகவும், இந்த அப்டேட் வாடிக்கையாளர்கள் எதிர் கொண்டு வரும் சில பிரச்சனைகளுக்கான திருத்தங்களையும், கேமரா மற்றும் பேட்டரி போன்ற விஷயங்களுக்கான மேம்பாடுகளையும் வழங்கும் என்றார். வரவிருக்கும் Android 13 அப்டேட் பற்றிய கேள்விக்கு பதிலளித்த மனு ஷர்மா, விரைவான வெளியீட்டு சுழற்சியில் நல்ல சாப்ட்வேர் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே நிறுவனத்தின் முன்னுரிமை என குறிப்பிட்டுள்ளார்.

Also Read : இந்தியாவில் 5ஜி சேவைகளின் விலை நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட குறைவாக இருக்கும் - காரணம் தெரியுமா.?

அதிகபட்சம் 12GB வரை ரேம் மற்றும் 256GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்டுடன் வரும் Nothing Phone (1) மொபைல் Qualcomm Snapdragon 778G Plus சிப்செட்டுடன் வருகிறது. மேலும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஃபோனின் பின்புறத்தில் இரண்டு 50MP சென்சார்கள், ஒரு மெயின் சென்சார் மற்றும் ஒரு அல்ட்ராவைட் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டூயல் கேமரா செட்டிங் உள்ளது.

Also Read : குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.

நத்திங் ஃபோன் (1) 6.55-இன்ச் OLED FHD+ 10-பிட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது HDR10+ -ஐ சப்போர்ட் செய்கிறது மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 240Hz டச் சேம்ப்ளிங் ரேட்டை கொண்டுள்ளது. வரவிருக்கும் ஆஃபர் சேலின் போது Nothing Phone (1) குறைந்த விலை மற்றும் கேஷ்பேக் ஆஃபர்களை கொண்டிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.3000 வரை கேஷ்பேக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Smartphone, Technology

அடுத்த செய்தி