ஹை ஸ்பீடு EV ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் BattRE நிறுவனம் - எப்போது தெரியுமா?

EV ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் BattRE நிறுவனம்

ஜெய்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் BattRE நிறுவனமும் எலக்டிரிக் ஸ்கூட்டர் தயாரிப்பை வேகப்படுத்தியுள்ளது. மேலும், பேட்டரி ஸ்டேஷன் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளையும் நாடு முழுவதும் நிறுவுவதற்கான பணிகளை அந்த நிறுவனம் வேகப்படுத்தியுள்ளது.

  • Share this:
இந்தியா எலக்டிரிக் வாகனங்கள் தயாரிக்கும் ஹப்பாக மாறி வருகிறது. எலக்டிரிக் வாகனங்களை தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் ஓலா முதல் டெஸ்லா வரை இந்தியாவில் கால் பதித்துள்ளன.

ஓலா நிறுவனம் சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூரில் பிரம்மாண்டமான எலக்டிரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் தொழிற்சாலையை வேகமாக நிறுவி வருகிறது. இதேபோல் மற்ற நிறுவனங்களும் கார் மற்றும் இருசக்கர மின்சார வாகனங்கள் தயாரிப்பை விரைவில் தொடங்க உள்ளன.

அந்தவகையில், ஜெய்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் BattRE நிறுவனமும் எலக்டிரிக் ஸ்கூட்டர் தயாரிப்பை வேகப்படுத்தியுள்ளது. மேலும், பேட்டரி ஸ்டேஷன் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளையும் நாடு முழுவதும் நிறுவுவதற்கான பணிகளை அந்த நிறுவனம் வேகப்படுத்தியுள்ளது.இது குறித்து பேசிய அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிஷ்சலால் சவுத்திரி, "பேட்டரி நிறுவனம் ஜெய்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம். இதுவரை நாங்கள் உற்பத்தி செய்துள்ள இரு சக்கர ஸ்கூட்டர் மூலம் 5700 மெட்ரிக் டன் கார்பன் வெளியேற்றத்தை குறைத்திருக்கிறோம். எங்கள் நிறுவனத்தின் வாகனம் நாடு முழுவதும் 180 டீலர்களிடம் தற்போது கிடைத்து வருகிறது" எனத் தெரிவித்தார்.பேட்டரி எலக்டிரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தற்போது BattRE ONE மற்றும் BattRE Lo:EV என இரு விதமான மாடல்களில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. BattRe ONE மாடல் நடுத்தர மக்களை குறிவைத்தும், BattRE Lo:EV வாகனம் என்டிரி லெவலிலும் கிடைக்கிறது.

ALSO READ |  மின்சார வாகனம் வாங்கப்போறீங்களா? உங்களுக்கு ஓர் ஹேப்பியான தகவல்

இரு ஸ்கூட்டர்களிலும் டிஸ்க் பிரேக், பாஸ்ட் சார்ஜிங், திருட்டு எச்சரிக்கை அலாரம், எல்.இ.டி விளக்கு ஆகியவை இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் ஹைஸ்பீடு ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் வகையில் அவை இருக்கும் எனவும் விளக்கம் கொடுத்துள்ளது.நிஷ்சலால் சவுத்திரி பேசும்போது, "தங்கள் நிறுவனத்தின் முக்கிய இலக்கு, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களும் இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு தேவையான சார்ஜிங் ஸ்டேஷன், உதிரிபாகங்கள் மற்றும் வாரண்டி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

ALSO READ |  குறுகிய தொலைவு விநியோகத்துக்கு டெக்ஸ் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் - யூலு நிறுவனம் அறிவிப்பு!

அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் வாகனங்களின் விலை குறைவாக இருக்கும. குறிப்பாக, பெட்ரோல் வாகனங்களை ஒப்பிடுகையில் 90 விழுக்காடு விலை குறைவாக இருக்கும். சந்தையில் பெட்ரோல் விலை ஏற்றம் தொடர்ந்து கொண்டே இருப்பதால், எலக்டிரிக் வாகனங்களை நோக்கி மக்கள் அதிகளவு திரும்புவதற்கு உகந்த சூழல் நிலவுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர்களான பஜாஜ், ஹீரோ, டி.வி.எஸ் மற்றும் ஓலா நிறுவனங்கள் எலக்டிரிக் வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளதால், எலக்டிரிக் வாகனங்கள் மீதான நம்பிக்கை மக்களிடையே அதிகரித்திருப்பதாக சவுத்திரி கூறியுள்ளார்.மேலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தியாவில் எலக்டிரிக் இரு சக்கர வாகனங்கள் விற்பனை கனிசமான அளவில் உயர்ந்திருப்பது, கூடுதலான நம்பிக்கையை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: