• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • விரைவில் அறிமுகமாகும் நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போன் - விலை, சிறப்பம்சங்கள் இதோ!

விரைவில் அறிமுகமாகும் நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போன் - விலை, சிறப்பம்சங்கள் இதோ!

நோக்கியா XR20 Rugged

நோக்கியா XR20 Rugged

டிஸ்பிளேவைப் பொறுத்த வரை 6.67-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
புதிய நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

HMT குளோபல் நிறுவனம், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. அடுத்த வாரத்தில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செயப்பட்டது. இதில் பாதுகாப்பு அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நோக்கியா போன்கள் சிறந்த தரத்துக்கு பெயர் பெற்றது என்பதால், தரத்தில் சமரசம் இல்லாமல் நீண்ட காலம் நீடிக்கும் வகையில் விற்பனைக்கு வரும் என ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு கவனம் செலுத்தப்பட்டது போல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைப்புக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவைப் பொறுத்த வரை 6.67-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது பெரிய டிஸ்பிளேவாக இருக்கும். இதனால் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என கருதப்படுகிறது. 550 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள், நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும், இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ - கோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், அட்ரினோ 619 ஜி.பி.யுவும் இடம்பெற்றுள்ளது. இது ஸ்பீடான இயக்கத்துக்கு உதவும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு பெஸ்ட் யூசர் அனுபவத்தை கொடுக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சந்தையில் களமிறங்கும்போது ஆன்டிராய்டு 11 இயங்குதளத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போன், பின்னர் ஆன்டிராய்டு 12 அப்டேட்டை பெறும்.

Also read... இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் வாட்ச் ஹாரி பாட்டர் லிமிடெட் வெர்ஷன்!

இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்பில்டு மெமரி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெமரி நீட்டிப்பு வசதியும் உள்ளது. கூடுதல் மெமரி கார்டை சேர்த்துக்கொள்ள, கூடுதல் ஸ்லாட்டும் இன்பில்டாக கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்த வரை நோக்கியா எக்ஸ்.ஆர்20 Rugged ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 பிரைமரி கேமரா, 13 எம்.பி வைடு கேமரா என மொத்தம் இரு கேமராக்கள் இடம்பெற்றிருக்கும். செல்பி மற்றும் வீடியோ கால்கள் பேசுவதற்காக முன்பக்கம் இடம்பெறும் கேமரா 8 எம்.பி ஆகும்.

கேமராவில் இது பொதுவான அம்சங்களில் ஒன்று என்றாலும், புகைப்படங்களை மெருகூட்டும் அசத்தல் செட்டிங்ஸ்களும் இடம்பெற்றுள்ளன. 4630 எம்ஏஎச் பேட்டரி, 18 பாஸ்ட் சார்ஜிங் இணைப்பு, கைரேகை ஸ்கேனர், வாட்டர் ரெசிஸ்டெண்ட், ப்ளூடூத், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும். விலை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போன் விலை அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: