• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • மலிவு விலையில் அறிமுகமான Nokia X100 5G ஸ்மார்ட் ஃபோன் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

மலிவு விலையில் அறிமுகமான Nokia X100 5G ஸ்மார்ட் ஃபோன் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Nokia X100 5G ஸ்மார்ட் ஃபோன்

Nokia X100 5G ஸ்மார்ட் ஃபோன்

Nokia X100 5G : எச்எம்டி குளோபல் நிறுவனம் பட்ஜெட் பிரைஸ் கேட்டகிரியில் புதிய 5ஜி ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • Share this:
நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட் ஃபோன்களை மார்க்கெட்டிங் செய்து வரும் HMD நிறுவனம் 5G ஃபோன்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக எச்எம்டி குளோபல் நிறுவனம் பட்ஜெட் பிரைஸ் கேட்டகிரியில் புதிய 5ஜி ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. Nokia X100 5G என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட் ஃபோன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 ப்ராஸ்சஸர் மூலம் இயங்குகிறது.

மேலும் இதன் பின்பக்கத்தில் 48MP குவாட் கேமரா செட்டப்பை கொண்டு வருகிறது. Nokia X10 மற்றும் Nokia XR20 உடன் இந்த ஃபோன் இணைந்தாலும் பட்ஜெட் ஃபிரெண்ட்லி மாடல் என்பதால் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வருகிறது. இந்த Nokia X100 5G-ஐ தற்போது அமெரிக்காவில் மட்டுமே பிரத்யேகமாக அறிமுகப்படுத்தி இருக்கிறது HMD நிறுவனம்.

எனினும் புதிய Nokia X100 5G அமெரிக்காவிற்கு வெளியே விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்த தகவலை இதுவரை HMD வெளிப்படுத்தவில்லை. எனினும் பட்ஜெட் ஃபோன் என்பதால் Nokia X100 5G-ன் செயல்திறன் மற்றும் பிற விவரக்குறிப்புகளும் சிறப்பானவையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

ALSO READ |  உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனை ஸ்மார்ட்டாக பயன்படுத்த உதவும் 5 டிப்ஸ்கள்!

விலை விவரம்..

6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட Nokia X100 5G ஸ்மார்ட் ஃபோனின் விலை அமெரிக்காவில் 252 டாலராக (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.18,700) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் நவம்பர் 19 முதல் அங்கு விற்பனைக்கு வர உள்ளது.

Nokia X100 ஸ்பெசிஃபிகேஷன்ஸ்..

புதிய Nokia X100 5G மொபைலானது HMD நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய Nokia G300-ஐ போலவே தோற்றமளிக்கிறது மற்றும் அதில் இருக்கும் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 ப்ராஸ்சஸரை பயன்படுத்தி இயங்குகிறது. இந்த மொபைலில் 1080x2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 20:9 என்ற ரேஷியோவுடன் கூடிய 6.67-இன்ச் ஃபுல் -எச்டி+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த மொபைலின் இன்டர்னல் ஸ்டோரேஜை தேவைப்பட்டால் 1TB வரை விரிவாக்கி கொள்ளலாம்.

ALSO READ |  5ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தயாராகுங்கள் - சாம்சங் 5ஜி சீரிஸ் லிஸ்ட் இதோ!

கேமெரா செட்டப்பை பொறுத்த வரை Nokia X100 5G-ன் பின்புறம் 48-MP பிரைமரி கேமரா, 5-MP அல்ட்ராவைட் கேமரா, 2-MP டெப்த் கேமரா மற்றும் 2-MP மேக்ரோ கேமரா உள்ளது. இதன் முன்புறம் பஞ்ச்-ஹோல் டிசைனில் செல்ஃபிக்களுக்காக 16MP கேமராவும் உள்ளது.



இந்த ஃபோனில் 4470mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 18W ஃபாஸ்ட் சர்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் நிலையில், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 11-ஐ கொண்டுள்ளது ஏமாற்றம் தருவதாக உள்ளது. இதில் காணப்படும் OZO ஆடியோ டெக்னலாஜி ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங்கை சிறப்பாக்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: