ஜேபிஎல் சவுண்ட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் என அசத்தும் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் டிவி..!

இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவியின் பெரும் சிறப்பம்சமே இதனது சவுண்ட் தரம்தான்.

ஜேபிஎல் சவுண்ட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் என அசத்தும் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் டிவி..!
நோக்கியா
  • News18
  • Last Updated: November 19, 2019, 2:13 PM IST
  • Share this:
நோக்கியா புதிதாக ஸ்மார்ட் டிவி ரகங்களை இந்தியாவுக்காக வெளியிடுகிறது. இந்தியாவுக்கான வெளியீட்டை ஃப்ளிப்கார்ட் மேற்கொள்கிறது.

இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவியின் பெரும் சிறப்பம்சமே இதனது சவுண்ட் தரம்தான். சிறப்பான ஆடியோ அம்சங்களால் சந்தையில் இந்த டிவிக்குப் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேபிஎல் சவுண்ட் மட்டுமல்லாமல் டால்பி ஆடியோ, டிடிஎஸ் TruSurround Sound என முற்றிலும் ஆடியோ அம்சங்களுக்காகவே அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும் நோக்கியா ஸ்மார்ட் டிவி 50 இன்ச்-க்கு மேல் இருக்கலாம். 4K UHD ரெசொலியூஷன் உடன் ஆண்ட்ராய்டு 9.0 அடிப்படையில் இயங்கும் எனக் கூறப்படுகிறது. கூகுள் ப்ளே ஸ்டோர் இருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.


சமீபத்தில் மோட்டரோலா இந்தியாவில் வெளியிட்ட ஸ்மார்ட் ட்டிவி-க்குப் போட்டியாக வருகிற டிசம்பரில் வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டரோலா ஸ்மார்ட் டிவி-யின் விலை 64,999 ரூபாய் ஆகும்.

மேலும் பார்க்க: இனி டிக்டாக் மூலமாகவும் ஷாப்பிங் செய்யலாம்..!
First published: November 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com