55 இன்ச் 4K UHD ஸ்கிரீன், ஜேபிஎல் ஆடியோ... இன்று முதல் விற்பனையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி!

அறிமுக கால சலுகையாக ஆன்லைன் விற்பனையில் 10 சதவிகிதம் தள்ளுபடியும் மூன்று ஆண்டுகளுக்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.

55 இன்ச் 4K UHD ஸ்கிரீன், ஜேபிஎல் ஆடியோ... இன்று முதல் விற்பனையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி!
நோக்கியா
  • News18
  • Last Updated: December 5, 2019, 9:06 PM IST
  • Share this:
நோக்கியா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவி இன்று முதல் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

55 இன்ச் 4K UHD ஸ்கிரீன், ஜேபிஎல் ஆடியோ தொழில்நுட்பம், 24 வாட் ஸ்பீக்கர்கள் என அசத்தும் தொழில்நுட்பங்களுடன் அறிமுகம் ஆகியுள்ளது நோக்கியா ஸ்மார்ட் டிவி. இந்த டிவி ஆண்ட்ராய்டு 9.0 அடிப்படையில் இயங்கும். ஜேபிஎல் ஆடியோ தொழில்நுப்டம் என்பதால் டிடிஎஸ் ட்ரூசவுண்டு, டால்பி ஆடியோ என தியேட்டர் அனுபவங்கள் வீட்டிலேயே கிடைக்கும்.

நோக்கியா ஸ்மார்ட் டிவி-யின் விலை 41,999 ரூபாய் ஆகும். டிவி உடன் சுவரில் பதிப்பதற்கான மவுன்ட், கூகுள் அசிஸ்டென்ட் உடன் ப்ளூடூத் ரிமோட் ஆகியனவும் வழங்கப்படும். அறிமுக கால சலுகையாக ஆன்லைன் விற்பனையில் 10 சதவிகிதம் தள்ளுபடியும் மூன்று ஆண்டுகளுக்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.


ஆண்ட்ராய்டு 9.0 அடிப்படையில் இயங்குவதால் கூகுள் ப்ளே ஸ்டோர் சப்போர்ட் இருக்கும். 2.25 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இந்த டிவி உள்ளது. ப்ளுடூத் 5.0 கனெக்‌ஷன் உள்ளது.

மேலும் பார்க்க: உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியைக் காப்பாற்ற வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்!
First published: December 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்