ஆகஸ்ட் மாதம் அட்டகாச விலையில் அறிமுகமாகும் நோக்கியா 6.2, நோக்கியா 7.2..!

13 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா, 20+8+5 மெகாபிக்சல் கொண்ட மூன்ற் ரியர் கேமிரா என நோக்கியா 6.2 அசத்தும் எனக் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: July 24, 2019, 6:35 PM IST
ஆகஸ்ட் மாதம் அட்டகாச விலையில் அறிமுகமாகும் நோக்கியா 6.2, நோக்கியா 7.2..!
நோக்கியா 6.2, 7.2
Web Desk | news18
Updated: July 24, 2019, 6:35 PM IST
ஆகஸ்ட் மாதம் ஹெச்எம்டி க்ளோபல் நிறுவனம் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஆகிய இரு ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா X71 ஸ்மார்ட்ஃபோனை அடிப்படையாகக் கொண்டே புதிய நோக்கியா 6.2 வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. நோக்கியா 6.2 மற்றும் 7.2 ஆகிய இரு ஃபோன்களுமே ஒரு நாளில் இந்தியா மற்றும் ரஷ்யாவில் விற்பனைக்கு வருகிறது.

மூன்று ரியர் கேமிரா, ஸ்போர்ட் லுக் என நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்கள் வரிசையில் புதிய 6.2 மற்றும் 7.2 இருக்கும் எனக் கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஆகஸ்ட் வெளியீடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


வெளியான தகவல்கள் அடிப்படையில், 6 இன்ஸ் ஹெச்டி AMOLED திரை, 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா, 20+8+5 மெகாபிக்சல் கொண்ட மூன்ற் ரியர் கேமிரா என நோக்கியா 6.2 அசத்தும் எனக் கூறப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா 6.2-வின் பேட்டரி திறன் 3,300mAh ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், நோக்கியா 7.2-வின் சிறப்பு அம்சங்களும் லீக் ஆகியுள்ளன. 6.18 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு ரகமாக வர உள்ளதாகத் தெரிகிறது.

மேலும் பார்க்க: 199 ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ்... இந்திய ரசிகர்களைக் கவர சிறப்பு ஆஃபர்..!
First published: July 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...