நோக்கியா மொபைல் திருவிழா- 4ஆயிரம் ரூபாய் வரையிலான பரிசுக் கூப்பன்கள்!

4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா 7.1 ஸ்மார்ட்ஃபோனின் விலையும் 15,999 ரூபாய் ஆகும்.

Web Desk | news18
Updated: July 21, 2019, 4:41 PM IST
நோக்கியா மொபைல் திருவிழா- 4ஆயிரம் ரூபாய் வரையிலான பரிசுக் கூப்பன்கள்!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: July 21, 2019, 4:41 PM IST
நோக்கியாவின் ’mobile fan festival’ என்னும் சிறப்பு விற்பனைத் திருவிழா ஜூலை 25-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இந்த திருவிழா விற்பனைக் காலத்தில் நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு ஆஃபர்களும் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. நோக்கியா 6.1 ப்ளஸ், நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 8.1 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் சிறப்புத் தள்ளுபடிகள் உள்ளன.

சில ஸ்மார்ட்ஃபோன்களுக்கு நோக்கியா 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுக் கூப்பன்களும் வழங்கப்படுகின்றன. ’FANFESTIVAL' என்ற கோட் பயன்படுத்தியும் வாடிக்கையாளர்கள் சிறப்பு சலுகைகளைப் பெற முடியும். பழைய நோக்கியா ஃபோன்களை எக்ஸ்சேஞ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடியும் உள்ளது.


4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா 6.1 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன் 15,999 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. இதேபோல், 4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா 7.1 ஸ்மார்ட்ஃபோனின் விலையும் 15,999 ரூபாய் ஆகும்.

மேலும் பார்க்க: ஃபேஸ்புக்கின் ‘லிப்ரா’ கரன்சி நிதிஅமைப்பைக் குலைக்குமா? ஜி7 நாடுகள் ஆலோசனை
First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...