முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / நோக்கியா கொண்டு வந்த புதிய மாற்றம்.. செல்போன் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா?

நோக்கியா கொண்டு வந்த புதிய மாற்றம்.. செல்போன் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா?

நோக்கியா புதிய லோகோ

நோக்கியா புதிய லோகோ

சுமார் 60 வருடங்களாக பயன்படுத்தி வந்த லோகோவை மாற்றியுள்ளது நோக்கியா நிறுவனம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaFinlandFinland

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம், உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான விளங்கி வந்தது. 90ஸ் கிட்ஸ்கள் தங்கள் பார்த்த முதல் செல்போனான நோக்கியாவை எப்போதும் நினைவுகளில் வைத்திருப்பர்.

ஸ்மார்ட் போன்கள் வருகை அதிகரித்த நிலையில் சீனா, ஜப்பான் நிறுவனங்களுடன் போட்டிபோட இயலாமல் நோக்கியா நிறுவனம் பின்னடைவை சந்தித்து. இந்நிலையில் மீண்டும் சந்தையை பிடிக்கும் வகையில் நோக்கியா களம் இறங்கியுள்ளது.

இதற்காக, சுமார் 60 வருடங்களாக பயன்படுத்தி வந்த லோகோவை மாற்றியுள்ளது நோக்கியா நிறுவனம். ஏற்கனவே இருந்த நீல நிற வடிவம் முற்றாக நீக்கப்பட்டு 5 விதமான தோற்றத்தில் நோக்கியா என்ற எழுத்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய மாற்றத்தை தனது லோகோவிலிருந்தே தொடங்கியுள்ள நோக்கியா நிறுவனம், மீண்டும் சந்தையை பிடிக்குமா, பழையபடி தங்களின் சாதனங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லுமா என்பதை காலம் தான் கூற வேண்டும்.

First published:

Tags: Nokia, Smartphone, Technology