ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள Nokia G60 5ஜி ஸ்மார்ட்போன்.! ஸ்பெசிஃபிகேஷன்ஸ் மற்றும் விலை பற்றிய விவரங்கள்.!

விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள Nokia G60 5ஜி ஸ்மார்ட்போன்.! ஸ்பெசிஃபிகேஷன்ஸ் மற்றும் விலை பற்றிய விவரங்கள்.!

நோக்கியா G60 5G

நோக்கியா G60 5G

Nokia G60 5G | 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டு 2 கலர் ஆப்ஷன்களில் Nokia G60 5G மொபைல் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நோக்கியா பிராண்டட் போன்களை தயாரிப்பதற்கான உரிமம் பெற்றுள்ள HMD Global நிறுவனம், இந்தியாவில் அதன் சமீபத்திய Nokia G60 என்ற புதிய ஸ்மார்ட் ஃபோனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச அளவில் அறிமுகமான இந்த மொபைலின் முக்கிய ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது தான். நாட்டில் 5G சேவை துவக்கப்பட்டுள்ள நிலையில் இந்த 5G ஸ்மார்ட் ஃபோன் விரைவில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nokia mobile india தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பேஜில் வெளியிட்டுள்ள இது தொடர்பான ட்விட்டில், "120Hz ரெஃப்ரஷ் ரேட், 50MP டிரிபிள் AI கேமரா, ஹை-ஸ்பீட் 5G கனெக்டிவிட்டி தவிர பல ஆண்டுகளுக்கான சாஃப்ட்வேர் & ஹார்ட்வேர் சப்போர்ட் ஆகியவற்றுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக தயாராக உள்ளது" என அறிவித்துள்ளது. நாட்டில் அறிமுகபடுத்துவதற்கு முன்னதாக, நிறுவனம் இந்த மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்களை வெளிப்படுத்தும் வகையில் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் பட்டியலிட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட் ஃபோனின் வெளியீட்டு தேதி மற்றும் இந்திய விலை விவரங்களை பிராண்ட் இன்னும் வெளியிடவில்லை.

6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டு 2 கலர் ஆப்ஷன்களில் இந்த மொபைல் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாக் மற்றும் ஐஸ் என 2 கலர்களில் கிடைக்கும் என தெரிகிறது. Nokia G60 5G மொபைல் 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.58 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைலின் டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொட்டக்ஷனை கொண்டுள்ளது.

Also Read : ரூ.15,000 பட்ஜெட்டிற்கும் கீழ் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்..!

டூயல் நானோ சிம் ஸ்லாட்டை கொண்டுள்ள Nokia G60 ஆண்ட்ராய்டு 12-ல் இயங்குகிறது. இந்த 5G ஸ்மார்ட் போன் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் இணைந்து ஸ்னாப்டிராகன் 695 5G SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளிட்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிக்காக முன்பக்கம் 8 மெகாபிக்சல் ஃப்ரன்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. Nokia G60 மொபைல் சைட்-மவுண்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த மொபைல் 4500mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது 20W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைலின் மற்ற முக்கிய அம்சங்களில் ப்ளூடூத் 5.1, 3.5 மிமீ ஜாக் மற்றும் டைப்-சி போர்ட் மற்றும் டூயல்-பேண்ட் வைஃபை உள்ளிட்டவை அடங்கும்.

Also Read : விலை இவ்வளவு கம்மியா? இந்தியாவில் அறிமுகமானது ஜியோபுக்... தாறுமாறு சிறப்பம்சங்கள்!

முக்கியமாக இந்த ஸ்மார்ட் ஃபோன் கேஷ்வல் கேமிங் மற்றும் சோஷியல் மீடியா ஆப்ஸ்களை அதிகம் பிரவுஸ் செய்யும் இளம் யூஸர்களை இலக்காக கொண்டு நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக Nokia mobile india கூறி இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.20,000-க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Selvi M
First published:

Tags: 5G technology, Nokia, Tamil News, Technology