ஒரு ஃபோன்... ஆறு கேமிரா...அட்டகாச ஆஃபர்களுடன் அறிமுகமானது நோக்கியா 9!

6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 3,320 mAh பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் முறை என அசத்துகிறது புதிய நோக்கியா 9.

Web Desk | news18
Updated: July 11, 2019, 1:23 PM IST
ஒரு ஃபோன்... ஆறு கேமிரா...அட்டகாச ஆஃபர்களுடன் அறிமுகமானது நோக்கியா 9!
நோக்கியா 9 ப்யூர்வியூ
Web Desk | news18
Updated: July 11, 2019, 1:23 PM IST
இந்தியாவில் நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்ஃபோன் அறிமுகமாகி உள்ளது.

ஹெச்.எம்.டி க்ளோபல் என்ற நோக்கியாவின் ப்ராண்டு நோக்கியா 9 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நோக்கியா 9 குறித்த முதல் அறிவிப்பு சர்வதேச மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

ஐந்து மாதங்களுக்குப் பின்னர் தற்போது இந்தியாவில் நோக்கியா 9 களம் இறங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனின் அசத்தல் அம்சமே இதிலுள்ள கேமிராக்கள்தான். பின்புறத்தில் மட்டும் ஐந்து கேமிராக்களும் செல்ஃபி கேமிரா ஒன்று என மொத்தம் ஆறு கேமிராக்கள் இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்ஃபோனில் உள்ளன.


பின்புறத்தில் உள்ள ஐந்து கேமிராக்களில் இரண்டு 12 மெகாபிக்சல் ஆர்ஜிபி சென்சார் கேமிராவும் மூன்று 12 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் கேமிராவுமாக உள்ளன. நேற்று முதல் நோக்கியா 9 ஸ்மார்ட்ஃபோனுக்கான விற்பனை தொடங்கி உள்ளது. ஜூலை 17-ம் தேதி முதல் ஆஃப்லைன் விற்பனையும் தொடங்கிவிடும்.

49,999 ரூபாய் மதிப்புள்ள நோக்கியா 9 ஸ்மார்ட்ஃபோனை நோக்கியா இணையதளம் மூலம் பெறுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுக் கூப்பன் அளிக்கப்பட உள்ளது. இதனுடன் நோக்கியா 705 ஹெட்ஃபோனும் வழங்கப்பட உள்ளது. ஹெச்டிஎஃப்சி கார்டு உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 10% ஆஃபரும் உள்ளது. 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 3,320 mAh பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் முறை என அசத்துகிறது புதிய நோக்கியா 9.

மேலும் பார்க்க: இந்தியாவில் ஜியோ உடன் கைகோர்த்த PUBG..!
First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...