நோக்கியா ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.2000 வரை குறைப்பு!

ஏற்கெனவே நோக்கியோ நிறுவனத்தின் 3.1 பிள்ஸ் மற்றும் 6.1 பிளஸ் ஆகிய மொபைல்களின் விலையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1,000 ரூபாய் வரை குறைத்தது குறைக்கப்பட்டது.

நோக்கியா ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.2000 வரை குறைப்பு!
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்
  • News18
  • Last Updated: January 30, 2019, 11:23 AM IST
  • Share this:
நோக்கியா நிறுவனம் தனது இரு ஸ்மார்ட் போன்களின் விலையை இரண்டாயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 6.1 மற்றும் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 3.1 ஆகிய இரு மாடல்களின் விலையும் உடனடியாக குறைக்கப்படுவதாக நோக்கியா அறிவித்துள்ளது.

ஏற்கெனவே நோக்கியோ நிறுவனத்தின் 3.1 பிள்ஸ் மற்றும் 6.1 பிளஸ் ஆகிய மொபைல்களின் விலையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1,000 ரூபாய் வரை குறைத்தது குறைக்கப்பட்டது.


நோக்கியா 6.1


2018 ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கிய 6.1 ஸ்மார்ட்போன் 16,999 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் அக்டோபர் மாதம் 1,500 ரூபாய் குறைக்கப்பட்டு 13,499 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக 1,500 ரூபாய் குறைந்து 11,999 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நோக்கியா 3.1

2018 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் அக்டோபர் மாதம் 1,000 ரூபாயும் தற்போது 2,000 ரூபாயும் குறைக்கப்பட்டு 8,999 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: ஏழைகளுக்கு ஊதியம்... மோடி பாணியில் செல்கிறாரா ராகுல் காந்தி?
First published: January 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்