19 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது நோக்கியா 3310... நாளை வெளியீடு?

நவீன மொபைல் கேம், ஃபேஸ்புக் லைட் ஆகியன கொடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையும் 5 ஆயிரம் ரூபாய் ஆக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: September 4, 2019, 5:01 PM IST
19 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது நோக்கியா 3310... நாளை வெளியீடு?
நோக்கியா 3310
Web Desk | news18
Updated: September 4, 2019, 5:01 PM IST
90’ஸ் கிட்ஸ் ஸ்பெஷல் மொபைல் போன் ஆன நோக்கியா 3310, 19 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புது அவதாரத்தில் வெளியாக உள்ளது.

நோக்கியா 3310 ‘ஸ்னேக் கேம்’ என்பது 90’ஸ் கிட்ஸ்களின் ஆகச்சிறந்த மொபைல் ஆக இருந்தது. 2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்த நோக்கியா 3310 தற்போது 19 ஆண்டுகளுக்குப் பின் புது அப்டேட் உடன் தனது இரண்டாம் இன்னிங்ஸை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.எம்.டி க்ளோபல் என்ற பேனரின் கீழ் நோக்கியா 3310 போன் நாளை வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப புது வெர்ஷனாக நோக்கியா 3310 வெளியாக உள்ளது. இந்த போனின் விலை, சிறப்பு அம்சங்கள் குறித்த இதர தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், மஞ்சள், பச்சை, சிவப்பு என தோற்றத்தில் அசத்தக் காத்திருக்கிறது நோக்கியா 3310.


நவீன மொபைல் கேம், ஃபேஸ்புக் லைட் ஆகியன கொடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையும் 5 ஆயிரம் ரூபாய் ஆக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. நாளை நடைபெறும் IFA 2019 டெக் கண்காட்சியில் நோக்கியா 3310 குறித்த அறிவிப்பு வெளியாகுமா அல்லது மொபைல் போனே வெளியாகுமா என்ற கேள்வி நிலவுகிறது.

மேலும் பார்க்க: இனி ₹35 செலுத்த வேண்டாம் - ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்தது வோடஃபோன்..!
First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...