Home /News /technology /

விலை மலிவான ஃபிளிப் போனை (Nokia 2660 Flip) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நோக்கியா - விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

விலை மலிவான ஃபிளிப் போனை (Nokia 2660 Flip) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நோக்கியா - விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

நோக்கியா

நோக்கியா

Nokia 2660 Flip | நோக்கியா 2660 மொபைலில் எமெர்ஜென்சி பட்டன் உள்ளது, இது யூஸர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விரைவாக தொடர்பு கொள்ள உதவுகிறது. எமெர்ஜென்சி நேரத்தில் தொடர்பு கொள்ள 5 ஃபோன் நம்பர்களை சேமிக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நோக்கியா பிராண்டட் போன்களை தயாரிப்பதற்கான உரிமத்தை பெற்றுள்ள HMD Global நிறுவனம், இந்தியாவில் அதன் சமீபத்திய 4G VoLTE ஃபீச்சர் மொபைலை அறிமுகம் செய்து உள்ளது. HMD Global நிறுவனம் Nokia 2660 என்ற மலிவு விலை ஃபிளிப் போனை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபிளிப் ஃபோன் நோக்கியாவின் சீரிஸ் 30+ OS-ல் இயங்குகிறது, மேலும் 4G LTE கனெக்டிவிட்டியை கொண்டுள்ளது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை...

Nokia 2660 Flip மொபைலின் விலை ரூ.4,699-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் கருப்பு, சிவப்பு மற்றும் நீல கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபிளிப் ஃபோனை நோக்கியா ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோரிலும், அங்கீகரிக்கப்பட்ட ரீடெயில் விற்பனையாளர்களிடமிருந்தும் வாங்கலாம்.

நோக்கியா 2660 ஃபிளிப் ஃபோன் விவரக்குறிப்புகள்:

Nokia 2660 ஃபிளிப் மொபைல் Unisoc T107 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஃபிளிப் போன் பெரிய பட்டன்கள் மற்றும் பெரிய டிஸ்பிளேவுடன் வருகிறது. தொலைபேசியில் 48 MB ரேம், 128 MB இன்டர்னல் ஸ்டோரேஜ், 32 GB வரை microSD கார்டு சப்போர்ட் மற்றும் டூயல் சிம் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மொபைலின் சிம் சைஸ் நானோ ஆகும். இந்த மொபைலின் பிரதான டிஸ்ப்ளே QVGA ரெசல்யூஷனுடன் 2.8 இன்ச் நீளமும், இரண்டாம் நிலை டிஸ்ப்ளே QVGA ரெசல்யூஷனுடன் 1.77 இன்ச் நீளமும் கொண்டது.



நோக்கியா 2660-ன் ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், கார்ட்லெஸ் லேண்ட்லைன் ஃபோன்களில் இருப்பதைப் போலவே, charging cradle-லை கொண்டுள்ளது. இந்த மொபைலில் எமெர்ஜென்சி பட்டன் உள்ளது, இது யூஸர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விரைவாக தொடர்பு கொள்ள உதவுகிறது. எமெர்ஜென்சி நேரத்தில் தொடர்பு கொள்ள 5 ஃபோன் நம்பர்களை சேமிக்கலாம். மொபைல் திறந்திருந்தாலும் அல்லது மூடியிருந்தாலும் எமெர்ஜென்சி பட்டனை யூஸர்கள் எளிதாக அணுக முடியும்.

Also Read : ஒவ்வொரு செயலியும் ஒவ்வொரு மொழியில் - ஆண்ட்ராய்டு 13 OS இன் அசத்தலான அப்டேடட்.!

Nokia 2660 ஃபிளிப் ஃபோனில் 2.75W சார்ஜிங் சப்போர்ட்டுடன் 1450mAh நீக்க கூடிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபிளிப் மொபைலில் VGA கேமரா பொருத்தப்பட்டுள்ளது மற்றும் FM ரேடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. லவுட் ஆடியோ செட்டிங், Hearing aid compatibility (HAC) மற்றும் ஒரு வருட ரீப்ளேஸ்மென்ட் உத்தரவாதம் இந்த மொபைலுடன் வருகிறது.

Also Read : சீன மொபைல்கள் இந்தியாவில் தடையா.? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசாங்கம்.!

பின்புறத்தில் LED ஃபிளாஷ் கொண்ட 0.3-மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் ப்ளூடூத் v4.2 சப்போர்ட், மைக்ரோ-USB 2.0 போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 123 கிராம் எடை கொண்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Mobile phone, Nokia, Technology

அடுத்த செய்தி