ஸ்மார்ட்போன் பயன்படுத்தி ’போர்’ அடிக்கிறதா..?- நாஸ்டாலஜிக் மாற்றம் தரும் நோக்கியா

2.0 மைக்ரோ யூஎஸ்பி போர்ட் இணைக்கப்பட்டுள்ளது. டூயல் சிம், மைக்ரோ எஸ்டி கார்டு, 800mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்தி ’போர்’ அடிக்கிறதா..?- நாஸ்டாலஜிக் மாற்றம் தரும் நோக்கியா
நோக்கியா 110
  • News18
  • Last Updated: October 18, 2019, 8:04 PM IST
  • Share this:
நோக்கியா 110 ஃபீச்சர்போன் நேற்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஃபீச்சர் போன் ரகங்களில் பல வித அப்டேட்கள் உடன் இந்த போன் வெளியாகி உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் வெளியான நோக்கியா 105 போனின் அப்டேட் வெர்ஷனாக நோக்கியா 110 உள்ளது. MP3s, எப்ஃஎம் ரேடியோ, ஸ்நேக் கேம், ரியர் கேமிரா என ஒரு நாஸ்டாலஜிக் பேக்கேஜ் ஆகவே நோக்கியா 110 வெளியிடப்பட்டுள்ளது.

1,599 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 110, கறுப்பு, நீலம் மற்றும் பிங்க் ஆகிய மூன்று நிறங்களில் விற்பனையில் உள்ளது. அக்டோபர் 18-ம் தேதியான இன்று முதல் அனைத்து ஸ்டோர்களிலும் இப்புதிய போன் விற்பனைக்கு உள்ளது.


1.77 இன்ச் QQVGA டிஸ்ப்ளே, 4 எம்பி ரே மற்றும் 4 எம்பி ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது. 2.0 மைக்ரோ யூஎஸ்பி போர்ட் இணைக்கப்பட்டுள்ளது. டூயல் சிம், மைக்ரோ எஸ்டி கார்டு, 800mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 18.5 நாட்கள் வரையில் தாங்கும். 14 மணி நேர டாக் டைம் சார்ஜ் திறன், 27 மணி நேரம் தொடர் எம்பி3 ப்ளே, 18 மணி நேரம் எப்ஃஎம் என அசத்தல் சார்ஜிங் நிலை திறன் கொண்டுள்ளது. எல்இடி டார்ச் லைட் கூடுதல் சிறப்பாகும்.

மேலும் பார்க்க: 10 ஆயிரம் ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன் வாங்க ப்ளான் இருக்கா? ரெட்மியில் எது பெஸ்ட்..?

மோசடிப் பணமும்... ஆன்லைன் ரம்மியும்...! என்ன நடந்தது...?
First published: October 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading