1,299 ரூபாய்க்கு ஆன்லைனில் அறிமுகமானது புதிய நோக்கியா 106!

ஃப்ளிப்கார்டில் நோக்கியா 106 வாங்குவோர் ஆக்ஸிஸ் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: January 4, 2019, 12:19 PM IST
1,299 ரூபாய்க்கு ஆன்லைனில் அறிமுகமானது புதிய நோக்கியா 106!
நோக்கியா 106
Web Desk | news18
Updated: January 4, 2019, 12:19 PM IST
மொபைல் சந்தைகளில் மீண்டும் தனது ட்ரேட்மார்க் ஹேண்ட்செட்-ஐ களம் இறக்கியுள்ளது நோக்கியா 106.

கடந்த ஆண்டு நோக்கியா 3310 மற்றும் நோக்கியா 8810 மொபைல்களை அறிமுகம் செய்த நோக்கியா தனது புதிய அறிமுகமாக 1,299 ரூபாய்க்கு நோக்கியா 106-ஐ அறிமுகம் செய்துள்ளது.

இதுவரையில் நோக்கியா ஸ்டோர்களில் இப்புதிய மொபைல் விற்பனைக்கு வரவில்லை. ஆனால், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் நோக்கியா 106 விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

நோக்கியா அறிவித்த விலையைவிட ஃப்ளிப்கார்டில் 1,309 ரூபாயும் அமேசானில் 1,479 ரூபாயும் என அதிக விலைக்கு நோக்கியா 106 விற்பனை ஆகிறது.

ஃப்ளிப்கார்டில் நோக்கியா 106 வாங்குவோர் ஆக்ஸிஸ் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அமேசானில் HDFC க்ரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்குவோருக்கு 5 சதவிகித உடனடி தள்ளுபடியும் HDFC டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்குவோருக்கு 10 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

புதிய நோக்கியா 106, 3.5மிமி ஹெட்போன் ஜேக், ஃஎப் எம் ரேடியோ, எல்இடி ஃப்ளாஷ்லைட், 800mAh பேட்டரி, 4 MB ரேம், 4MB ஸ்டோரேஸ் கொண்டுள்ளது.
Loading...
மேலும் பார்க்க: சபரிமலை நுழைவை அரசியலாக்குவது யார்?
First published: January 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...