முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / முதல் கேமிங் இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்த Noise! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

முதல் கேமிங் இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்த Noise! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

Gaming TWS

Gaming TWS

புதிய கேமிங் TWS இயர்பட்ஸான Buds Combat-ஐ அறிமுகப்படுத்திய Noise நிறுவனம் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உள்நாட்டு லைஃப்ஸ்டைல் டெக் பிராண்ட்டாக இருக்கும் Noise நிறுவனம், இந்தியாவில் அதன் முதல் கேமிங் TWS (True Wireless Stereo)-வான Buds Combat-ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Buds Combat நீண்ட நேர கேமிங் செஷன்களுக்கு ஏற்றது.

இந்த புதிய இயர்பட்ஸ் ரூ.1,499 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்டீல்த் பிளாக், கவர்ட் ஒயிட் மற்றும் ஷேடோ கிரே உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. Noise நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்ஸ்களான Flipkart மற்றும் GoNoise-ல் இந்த Noise Buds Combat கேமிங் TWS வாங்க கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெதர்லைட் கேஸ், யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் மற்றும் ஐபிஎக்ஸ்5 வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பு ஆகியவற்றுடன் இந்த இயர்பட்ஸ்கள் நீடித்துழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Noise நிறுவனத்தின் இணை நிறுவனர் அமித் காத்ரி பேசுகையில், யூஸர்களின் பல தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் முதல் கேமிங் TWS-ஆன Noise Combat-ஐ அறிமுகப்படுத்தியதன் நாங்கள் யூஸர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம். எங்களது இந்த புதிய தயாரிப்பு கேமிங் செட்டப்பை நிறைவு செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Noise-ன் புதிய கேமிங் TWS Buds Combat இயர்பட்ஸின் அம்சங்கள்:

- இந்த புதிய Buds Combat இயர்பட்ஸானது USB Type-C சார்ஜிங் கனெக்டரை கொண்டுள்ளது. இதன் IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சம் தீவிர வேலை செய்யும் போது அல்லது தண்ணீருக்கு அருகில் இருக்கும் போது அவற்றை அணிவதை பாதுகாப்பானதாக்குகிறது.

- ட்ரெண்டி மற்றும் மாடர்ன் டிசைனோடு வந்துள்ள இந்த புதிய கேமிங் இயர்பட்ஸில் Quad Mic ENC (Environmental Noise Cancellation) பொருத்தப்பட்டுள்ளது மற்றும் யூஸர்களின் கேமிங் அனுபவம் தடையின்றி இருப்பதை உறுதி செய்யும் வகையில் 36 மணிநேர பேட்டரி லைஃபை சப்போர்ட் செகிறது. மேலும் தடையற்ற காலிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.

- கேமிங், கால்ஸ், விர்ச்சுவல் மீட்டிங் மற்றும் தடையற்ற தகவல்தொடர்பு உள்ளிட்டவற்றின் போது தெளிவான ஆடியோ அனுபவத்தை புதிய Buds Combat இயர்பட்ஸ் உறுதி செய்கிறது.

- in-ear டிசைனுடன் வந்துள்ள Buds Combat இயர்பட்ஸ்கள் ஈஸி இயர் டச் கன்ட்ரோல்ஸ்களை (easy ear touch controls) வழங்குகிறது. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 13mm டிரைவர் யூனிட்டுடன் வருகின்றன, மேலும் இது 40ms கீழான low latency-ஐ கொண்டுள்ளது.

இதனிடையே noise பிராண்ட் சமீபத்தில் அதன் புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியது, இதில் இன்-பில்ட் ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் காலிங் ஆப்ஷன் உள்ளன. Noise ColorFit Pro 4 GPS ஸ்மார்ட்வாட்ச் gonoise.com மற்றும் Amazon-ல் ரூ.2,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இது சார்கோல் பிளாக், டீப் ஒயின், மின்ட் கிரீன், சில்வர் கிரே, சன்செட் ஆரஞ்சு, டீல் ப்ளூ, ரோஸ் பிங்க் மற்றும் மிட்நைட் ப்ளூ உள்ளிட்ட 8 கலர் ஆப்ஷன்களில் வருவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Technology