Home /News /technology /

ஃபேஸ்புக்கில் பயனாளர் டேட்டா எங்கு இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது - மெடா தரப்பில் விளக்கம்

ஃபேஸ்புக்கில் பயனாளர் டேட்டா எங்கு இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது - மெடா தரப்பில் விளக்கம்

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஒரு தொழில்நுட்ப நிபுணர், இவர்களிடம் டேட்டா சேமிப்பகம் சார்ந்த கேள்விகளைக் கேட்டார். அதில், யூசர்களின் டேட்டா 55 ஃபேஸ்புக் சப்-சிஸ்டம்களில் சேமிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    டேட்டா பிரைவசி பற்றி சமீப காலமாக பல இடங்களில் இருந்து பலவிதமான பிரச்சனைகள் எழுந்த வண்ணம் உள்ளன. உலகின் முன்னணியில் இயங்கும் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று எந்தப் பக்கம் சென்றாலும் யூசர்களின் டேட்டாவுக்கு பாதுகாப்பு இல்லை, இந்நிறுவனங்கள் டேட்டாவை விற்பனை செய்கின்றன அல்லது டேட்டாவை அடிப்படையாக வைத்து விளம்பரம் செய்கின்றன என்று பிரைவசி விதிகளை மீறி நடப்பதாக அடிக்கடி புகார்களைக் காண்கிறோம். இந்நிலையில், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடாவில், யூசர்களின் டேட்டா எங்கு இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது என்று ஃபேஸ்புக்கின் மூத்தப் பொறியாளர்கள் கூறியுள்ளனர்.

    சட்ட ஆவணங்களில் காணப்பட்டுள்ள விவரங்கள் படி, ஃபேஸ்புக்கின் இரண்டு மூத்த பொறியாளர்களிடம், மெடா நிறுவனம் எவ்வாறு தனது சோஷியல் மீடியா யூசர்களின் டேட்டாவை டிராக் செய்கிறது, பயன்படுத்துகிறது, சேமித்து வைக்கிறது என்பது பற்றி தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தி இன்டெர்செப்ட்டில் வெளியான அறிக்கையின் படி, 9 ஆண்டுகள் அனுபவம் கொண்ட யூஜீன் ஸாராஷா, இன்ஜினியரிங் இயக்குனராகவும், 11 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஸ்டீவன் எலியா மென்பொருள் இன்ஜினியரிங் மேலாளராகவும் பணியாற்றியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு மோசடியைப் பற்றி, இவர்கள் இருவரிடமும் கடந்த மார்ச் மாதம் விசாரணை நடத்தப்பட்டது.

    ஒரு தொழில்நுட்ப நிபுணர், இவர்களிடம் டேட்டா சேமிப்பகம் சார்ந்த கேள்விகளைக் கேட்டார். அதில், யூசர்களின் டேட்டா 55 ஃபேஸ்புக் சப்-சிஸ்டம்களில் சேமிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு, பதிலளித்த யூஜீன் “ஒரு நபரால் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டால் இதற்கு பதிலளிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

    Read more: மிகவும் மலிவான விலையில் Redmi ஸ்மார்போன் இந்தியவாில் அறிமுகம்... விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

    அதே போல, ஃபேஸ்புக்கில் ஒரு யூசர் கணக்கின் டேட்டாவும் எவ்வாறு டிராக் செய்யப்படுகிறது என்பது பற்றி விவரங்களும் கேட்கப்பட்டன. அதற்கும், யூஜீன் அதே பதில் கூறினார். டேட்டா எவ்வாறு டிராக் செய்யப்படுகிறது என்பது பற்றி விவரங்களைப் பெற பல குழுவினர் பணியாற்ற வேண்டும். ஒரே ஒரு நபரால் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

    ஒரு யூசரின் டேட்டா எங்கிருக்கிறது, எப்படி பெறப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய ஒரு விவரங்கள் ஒரு இன்ஜினியருக்கு தெரியவில்லை என்று சொல்வதைக் கேட்பது ஆச்சரியமாக இல்லை என்று மெடாவின் சார்பாக கூறப்பட்டது. இதன் மூலம், ஃபேஸ்புக்கில் பணியாற்றுபவர்களால் கூட டேட்டா எங்கு எப்படி ஸ்டோர் செய்யப்படுகிறது என்பதைத் தனியாளாக கண்டறிய முடியாது என்பது தெரிய வருகிறது. அது மட்டுமல்லாமல், யூசர்களின் தனியுரிமை கமிட்மென்ட், கடமைகளை நிறைவேற்ற, டேட்டாவை பாதுகாக்க, என்று கணிசமான முதலீடு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Facebook

    அடுத்த செய்தி