விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்

ககன்யான் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விஞ்ஞானிகள் உழைத்து வருகின்றனர் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ சிவன்
  • News18
  • Last Updated: September 21, 2019, 11:01 AM IST
  • Share this:
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்

நிலவின் தென் துருவப் பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோவால் ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 2. நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கடந்த 7-ம் தேதி நிலவை நெருங்கியது. தரையிறங்கும் நேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் நிலவில் மென்மையாக தரையிறங்க முடியாமல் ஹார்டு லேண்டிங் ஆனது.

இதனால் லேண்டருடனான தகவல் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அது உடையாமல் இருப்பதை உறுதி செய்தனர். மேலும் அதனுடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முயற்சித்து வந்தனர். ஆனால் அது பலனலிக்கவில்லை


இதையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பேட்டியில், ‘நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் சந்திரயான் 2-வின் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆர்பிட்டருக்குள் இருக்கும் 8 கருவிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ககன்யான் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விஞ்ஞானிகள் உழைத்து வருகின்றனர்' என்று கூறியுள்ளார்
First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்