மிரர்லெஸ் கேமராக்களுக்காக 2 புதிய Z-mount லென்ஸ்களை அறிமுகப்படுத்திய நிக்கான்!

2 புதிய Z-mount லென்ஸ்களை அறிமுகப்படுத்திய நிக்கான்

புதிய வரவின் மூலம் Z சீரிஸ் கேமராக்களுக்கான முதல் மேக்ரோ லென்ஸ்களை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

  • Share this:
    சர்வதேச அளவில் மின்னணுப் பொருட்களை விற்பனை செய்யும் ஜப்பானிய நிறுவனம் நிக்கான் (Nikon) ஆகும். இதன் தலைமையகம் டோக்கியோவில் அமைந்துள்ளது. இது கேமரா, லென்ஸ், பைனாக்குலர், மெஷரிங் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் உள்ளிட்ட பல பொருட்களை தயாரிக்கிறது. ஒளியியல் மற்றும் இமேஜிங் தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்றது இந்நிறுவனம். இதனிடையே நிக்கான் இந்தியா தனது இசட்-மவுண்ட் மிரர்லெஸ் கேமரா (Z-mount mirrorless camera) வரிசையில் புதிய 2 லென்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    மேலும் டெவலப்மென்ட் ஸ்டேஜில் இருக்கும் மேலும் 2 லென்ஸ்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் நிக்கான் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய வரவின் மூலம் Z சீரிஸ் கேமராக்களுக்கான முதல் மேக்ரோ லென்ஸ்களை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய லென்ஸ்களுடன், நிக்கான் தனது மல்டி-கேமரா தொழில்முறை ரிமோட் ஷூட்டிங் கன்ட்ரோலர் சிஸ்டமான (multi-camera professional remote shooting controller system) NX ஃபீல்டையும் அறிமுகம் செய்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது தொழில்முறை ஒளிபரப்பாளர்கள் பல கேமரா அமைப்புகளை தொலைவிலிருந்து கட்டுப்படுத்த அனுமதிக்கும், மேலும் ஒரே நேரத்தில் FTP சர்வர்களுக்கு ஆட்டோமேட்டிக் ஃபைல் அப்லோட்ஸ்களை கையாளும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரு நிலையான குவிய நீள லென்ஸ்கள் (fixed focal length lenses) Nikkor Z 50mm F2.8 மற்றும் 105mm F2.8 VR S ஆகியவை ஆகும். டெவலப்மென்ட் ஸ்டேஜில் இருக்கும் Nikkor Z 28mm F2.8 மற்றும் 40mm F2 லென்ஸ்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த 2 புதிய லென்ஸ்களும் மொத்த நிகான் இசட்-மவுண்ட் போர்ட்ஃபோலியோவை 18 லென்ஸ்கள் மற்றும் இரண்டு டெலிகான்வெர்ட்டர்கள் வரம்பில் கொண்டு வருகின்றன.

    Nikon Z MC 50mm F2.8-ன் விலை ரூ.58,995, 105mm F2.8 VR S-ன் விலை விலை ரூ.89,995 ஆகும். இந்த லென்ஸ்களின் வரம்பு இப்போது நிகோனின் மிரர்லெஸ் வரம்பை பூர்த்தி செய்கிறது. க்ளோஸ்-அப் ஷூட்டிற்கான் மைக்ரோ' லென்ஸ்களாக நிறுவனம் இதை குறிப்பிடுகிறது. Nikon Z MC 50mm லென்ஸ் 10 எலிமெண்ட்களை கொண்டுள்ளது மற்றும் ஃபோக்கஸ் குரூப்பை இயக்க ஒரு ஸ்டெப்பிங் மோட்டாரை பயன்படுத்துகிறது. இந்த புதிய 50mm F2.8 லென்ஸ் Z-mount வரம்பில் 50mm F1.8 S மற்றும் 50mm F1.2 S ஆகியவற்றுடன் இணைகிறது. இதற்கிடையே புதிய 105mm லென்ஸ் Nikkor Z வரிசையில் நிலையான லென்ஸ்கள் மத்தியில் இப்போது மிக நீண்ட குவிய நீளத்தை (longest focal length) வழங்குகிறது.

    Also read... கூகுள் பிளே ஸ்டோரில் க்ளப்ஹவுஸ் செயலி 2 மில்லியன் டவுன்லோட்ஸ்!

    Nikkor Z lens வரம்பில் இப்போது 58mm F0.95 S ‘Noct’ போன்ற பிரீமியம் எண்ட் மற்றும் Z DX 50-250mm F4.5-6.3 VR போன்ற மிட்லிங் லென்ஸ்களும் அடங்கும். லென்ஸின் வரம்பு இப்போது நிக்கானின் மிரர்லெஸ் வரம்பை Z7 மற்றும் Z6 உடன் கொண்டு வருகிறது. இப்போது இந்த வரிசையில் ஆறு கேமராக்கள் உள்ளன - Z7 II, Z6 II, Z7, Z6, Z5 மற்றும் Z50. மேலும் ஒரு ட்ரூ பிளாக்ஷிப்பான (flagship) Nikon Z9 டெவலப்மென்டில் உள்ளது. மேலும் இது Sony a9 மற்றும் Canon Eos R3 போன்ற கேமராக்களுக்கு உண்மையான முதன்மை போட்டியாளராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: