ஸ்மார்ட் ஷூ-வை அறிமுகப்படுத்திய Nike!

இந்த ஸ்மார்ட் ஷூ-வின் விலை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

ஸ்மார்ட் ஷூ-வை அறிமுகப்படுத்திய Nike!
nike ஷூ
  • News18
  • Last Updated: January 16, 2019, 2:52 PM IST
  • Share this:
Nike நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் ஷூ ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. உங்களது ஸ்மார்ட்ஃபோன் மூலம் இந்த ஸ்மார்ட் ஷூ-வை முற்றிலுமாக நீங்கள் இயக்கலாம்.

வாடிக்கையாளர்களைக் கவரப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஸ்மார்ட் ஷூ-வை களம் இறக்கியுள்ளது நைக்கி. லேஸ் இல்லாத இந்த ஷூ, அணிபவர்களின் கால் மற்றும் காலின் செயல்பாடுகளுக்கு ஏற்ப இறுகி தளரும் தன்மை கொண்டதாக வடுவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ஸ்மார்ட்ஃபோன் ஆப் மூலம் ஓடும் திறன், ஃபிட்னஸ் டிப்ஸ் என அனைத்தையும் ஷூ மூலம் ஆராய்ந்து நம்முடைய ஸ்மார்ட்ஃபோனுக்குத் தகவல் தரும். முதலாவதாகக் கூடைப்பந்து வீரர்களுக்கான ஷூ-வாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு தளத்துக்கும் ஏற்ப அறிமுகப்படுத்தப்படும் என நைக்கி நிறுவன இயக்குநர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட் ஷூ-வின் விலை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. ஸ்டோர் விற்பனையைவிட ஆப் மூலம் விற்பனையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது நைக்கி.

மேலும் பார்க்க: பாலமேடு ஜல்லிக்கட்டு! உறுதிமொழி எடுத்து களத்தில் இறங்கிய மாடுபிடி வீரர்கள்
First published: January 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்