சாம்சங் கேலக்ஸி டேப், இனி வரும் காலங்களில் கேலக்ஸி டேப் எஸ்7+ ( Galaxy Tab S7+) என அழைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்டிராய்டு சந்தையில் உள்ள டேப்புகளில் சாம்சங் கேலக்ஸி டேப்கள் மிகவும் பிரபலமாக உள்ளது. TAB பயன்படுத்துபவர்களில் அதிகமானோர் சாம்சங் கேலக்ஸி TAB- ஐ பயன்படுத்துக்கின்றனர். தென்கொரிய நிறுவனமான சாம்சங் விரைவில் 2 TAB -களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் கேலக்ஸி டேப் எஸ் 7 லைட்(Galaxy Tab S7 Lite). அடுத்த மாதமான ஜூனில் சந்தையில் அறிமுகப்படுத்த சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்பு சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 மாடல்
Tab S7 Lite என அழைக்கப்பட்டது. தற்போது, Galaxy Tab S7+ Lite என அழைக்கப்படும் என வதந்தியும் பரவி வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள சாம்சங் நிறுவனத்தின் டேப்-ல் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள் அண்மையில் வெளியானது. அதாவது, Samsung Galaxy Tab S7+ Lite tablet PC-யானது Mystic Pink கலருடன், புக் ஸ்டைல் பிலிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரவுள்ள டேப்-களுக்கு புதிய கலர் ஆப்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸியின் புக் ஸ்டைல் கவர் உள்ளிட்ட அப்டேட்டுகளை டிப்ஸ்டர் இவான் பிளாஸ் வெளியிட்டதன் முலம் உலகுக்கு முன்கூட்டியே தெரியவந்தது. புதிய டேப் வெளியீட்டுடன் சாம்சங் கேலக்ஸி A7 லைட்(Samsung Galaxy A7 Lite) ஜூன் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், குவால்கம் ஸ்நாப்டிராகன் 750G சிப்செட்டுடன் 8 ஜிபி ரேம் கொடுக்கப்படும் என்றும், சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 லைட்டுன் 5.0 ப்ளூடூத் மற்றும் வைஃபை 5, யூ.எஸ்.பி டைப் சி போர்ட்ஆகியவையும் கொடுக்கப்பட உள்ளதாக வதந்திகள் உலா வருகின்றன.
Also read... பப்ஜி பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... புதிய பெயரில் பப்ஜி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கூடுதலான தகவல் என்னவென்றால், புதிதாக வெளியாகும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 லைட் 5G சப்போர்ட்டும் உள்ளது. சாம்சங் நிறுவனம் அறிவித்ததுபோல் ஜூன் மாதம் புதிய டேப்லெட்டுகள் வெளியிடப்படுவது உறுதியானால், இன்னும் பல அப்டேட்டுகள் விரைவில் எதிர்பார்க்கலாம். இதனிடையே, ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது தனது நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட் போன்களுக்கான செட்டிங்ஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்டுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்8 (galaxy s8) கேலக்ஸி எஸ்8+ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும், சாம்சங் நிறுவனம் புதிய அப்டேட்டுகளை கொடுக்காது. தங்கள் இணைதளத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் பக்கத்தில் இருந்தும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அந்த நிறுவனம் நீக்கியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.