Home /News /technology /

விரைவில் வருகிறது யூஸர்களின் உடல் செயல்பாடுகளை கண்காணிக்கும் Apple AirPods!

விரைவில் வருகிறது யூஸர்களின் உடல் செயல்பாடுகளை கண்காணிக்கும் Apple AirPods!

Apple AirPods

Apple AirPods

ஆப்பிளின் புதிய காப்புரிமை விண்ணப்பத்தின்படி, Apple AirPods மாடல் அதன் யூஸரின் உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் திறனைக் காட்டுகிறது.

யூஸர்களின் உடல் இயக்கம் (body movement) மற்றும் நிலையை (positioning) கண்டறிய உதவும் புதிய தொழில்நுட்பம் ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை வெளிவந்துள்ள தகவலின் படி இந்த அம்சம் நெக்ஸ்ட்-ஜென்ரேஷன் Apple AirPod-களுக்கானது. மேலும், இது ஃபிட்னஸ்+ வொர்க்அவுட்களுக்கு (Fitness+ workouts) ஏற்ப வேலை செய்ய கூடியது. ஆப்பிள் நிறுவனம் யூஸர்ர்களின் இயக்கம் மற்றும் நிலையை (movement and position) எவ்வாறு கண்டறிவது என்பதை ஆராய்ந்து வருகிறது.

"வயர்லெஸ் இயர் பட் சிஸ்டம் வித் போஸ் டிடெக்ஷன்" (Wireless Ear Bud System With Pose Detection) என்ற டெக்னலாஜிக்கு ஆப்பிள் நிறுவனம் காப்புரிமைக்கு தாக்கல் செய்துள்ளது. இது AirPods மூலம் உங்கள் இயக்கத்தின் விவரங்களை தீர்மானிக்க செயல்படும் என்று AppleInsider தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்துள்ள இந்த புதிய காப்புரிமையானது, யூஸர்களின் இயக்கங்களின் போது accelerometer measurements போன்ற ஓரியன்டேஷன் தகவல்களை சேகரிக்க AirPods சென்சார்களை கொண்டிருக்கலாம் என முன்மொழிகிறது.

நியூ ஜென்ரேஷன் AirPods-ன் இயர் பட்ஸ்களில் இதற்கான சென்சார்கள் கொடுக்கப்படலாம் என்றும் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்துள்ள காப்புரிமை விண்ணப்பத்தில் கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆப்பிளின் புதிய காப்புரிமை விண்ணப்பத்தின்படி, Apple AirPods மாடல் அதன் யூஸரின் உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் திறனைக் காட்டுகிறது. 14-பக்க நீள காப்புரிமை விண்ணப்பத்தில் "போஸ் கண்டறிதலுடன் கூடிய வயர்லெஸ் இயர் பட் சிஸ்டம்" கோட்பாட்டளவில், யூஸர்களின் அசைவுகளின் போது இயர்பட்ஸ்கள் சென்சார்களைக் கொண்டிருக்க முடியும் என்பதை விளக்குகிறது.

Also read... உங்கள் iPhone-ல் இருந்து பிறருக்கு அனுப்பும் மெசேஜ்களை மறைப்பது எப்படி?

ஆப்பிள் தனது ஏர்போட்ஸ் ப்ரோவின் அடுத்த பதிப்பை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது, மேலும் இப்போது ஒரு புதிய அறிக்கை வரவிருக்கும் ஏர்போட்களில் ஃபிட்னஸ் டிராக்கிங் திறன்களுக்காக மோஷன் சென்சார்கள் நிரம்பியதாகக் கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டால் ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ 2 (Apple AirPods Pro 2) இந்த ஃபிட்னஸ் - ட்ராக்கிங் திறனை கொண்டதாக இருக்கலாம். மேலும் Apple AirPods Pro 2-வில் இடம்பெறும் இயர்பட்ஸ்கள் குறித்த வதந்திகள் ஏற்கனவே நிறைய வெளிவந்துள்ளன. ஆனால் ஆப்பிள் தரப்பில் இன்னும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

இரண்டாம் தலைமுறை (second-generation) AirPods Pro புதுமையான டிசைன் மற்றும் அப்கிரேடட் மேம்படுத்தப்பட்ட சிப் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது இது நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் மேலும் பல மேம்பாடுகள் போன்ற மேம்பட்ட ஆடியோ தொடர்பான செயல்பாடுகளைக் கொண்டு வரும் என தெரிகிறது. தவிர second-generation AirPods Pro லாஸ்லெஸ் ஆடியோ சப்போர்ட், அதை கண்டறிய உதவும் வகையில் ஒலி எழுப்பும் சார்ஜிங் கேஸையும் சப்போர்ட் செய்யலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Apple

அடுத்த செய்தி