முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / தமிழ் செய்தி இணையதளங்களில் நியூஸ்18 முதலிடம் 

தமிழ் செய்தி இணையதளங்களில் நியூஸ்18 முதலிடம் 

No. 1 Tamil Website - News18 Tamil

No. 1 Tamil Website - News18 Tamil

ஒரு கோடிக்கும் மேலான வாசகர் பரப்பை கொண்டிருப்பது, நியூஸ்18 மீதான வாசகர்களின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழில் வெளிவரும் செய்தி இணையதளங்களில் News18Tamil.com தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.  Comscore கணக்காய்வின் படி, கடந்த ஆகஸ்ட் மாதம் நியூஸ்18 தமிழ் இணையதளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 1.18 கோடி ஆகும். அதேபோல், மொத்தம் இணையப் பக்கங்கள் பார்க்கப்பட்ட எண்ணிக்கை 12.26 கோடி ஆகும். இணையதளத்தில் 10.372 கோடி நிமிடங்கள் செலவழித்துள்ளனர்.

இந்த கணக்கீட்டின்படி, மற்ற இணையதளங்களை விட, தமிழில், அதிகம் பேரால் பார்க்கப்பட்ட, அதிக நேரம் செலவிடப்பட்ட இணையதளமாக நியூஸ்18 திகழ்கிறது.

இணையத்தில் செய்திகளை உடனுக்குடன் வழங்கும் இணையதளமாக விளங்கும் நியூஸ்18 தமிழ், ஒரு கோடிக்கும் மேலான வாசகர் பரப்பை கொண்டிருப்பது, நியூஸ்18 மீதான அவர்களின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. அதே நம்பிக்கையோடு, உள்ளபடியே செய்திகளை, பயனுள்ள தகவல்களை மக்களுக்கு இணையம் வாயிலாக தொடர்ந்து வழங்கிட மேலும், உத்வேகத்தை வாசகர்கள் அளித்துள்ளனர்.

தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், எமது செய்தி வழங்கல் முறைகளில் ஏதேனும் குறை, நிறை, ஆலோசனை இருந்தால், உங்கள் கருத்துகளை editor.tamil@nw18.com என்ற மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கலாம்.

நியூஸ்18 இணையதளம் தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, அசாமி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா, உருது ஆகிய மொழிகளிலும் செய்தி சேவை வழங்குகிறது.

First published:

Tags: Breaking News, News18 Tamil Nadu, News18Tamil.com, Tamil News