முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / புதிதாக அறிமுகமாகியுள்ள Bose QuietComfort 45 ஹெட்ஃபோன்.! விலை மற்றும் சிறப்பம்சங்கள்..

புதிதாக அறிமுகமாகியுள்ள Bose QuietComfort 45 ஹெட்ஃபோன்.! விலை மற்றும் சிறப்பம்சங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

இந்தியாவில் Bose QuietComfort 45 ஹெட்ஃபோன்களின் விலை ரூ.32,900-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Bose நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவில் மற்றொரு சக்திவாய்ந்த ஹெட்ஃபோனை சேர்த்துள்ளது. புகழ்பெற்ற ஆடியோ பிராண்டான Bose, சமீபத்தில் QuietComfort 45 என்ற புதிய வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை அறிமுகம் செய்து உள்ளது.

லேட்டஸ்ட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்ட QuietComfort 45 ப்ளூடூத் ஹெட்ஃபோன்களை, Bose நிறுவனம் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த நிலையில், தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த ஹெட்ஃபோன்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஹெட்ஃபோன்கள் ப்ளூடூத் 5.1 மற்றும் ANC சப்போர்ட் கொண்டது. மேலும் High fidelity ஆடியோவையும் சப்போர்ட் செய்கிறது.

இந்த ஹெட்ஃபோன்களின் வலது இயர்கப்பில் 4 பட்டன்களை கொண்டுள்ளன. அவை மியூசிக்கை கட்டுப்படுத்தவும், இன்புட் சோர்ஸுடன் இணைக்கவும் பயன்படும்.மேலும் இவை Bose SimpleSync அம்சத்துடன் வருகின்றன. இது யூஸர்கள் ஹெட்ஃபோன்களை இணக்கமான Bose Soundbar-களுடன் விரைவாக கனெக்ட் செய்ய அனுமதிக்கிறது.

Bose QuietComfort 45-ன் இந்திய விலை:

இந்தியாவில் Bose QuietComfort 45 ஹெட்ஃபோன்களின் விலை ரூ.32,900-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த லேட்டஸ்ட் ஹெட்ஃபோன்கள் Bose எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்ஸ் , க்ரோமா, ரிலையன்ஸ் மற்றும்  ஆஃப்லைன் ரீட்டெயில் ஸ்டோர்ஸ் மற்றும் அமேசானில் பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

also read : ரீசார்ஜ் செய்வதற்கு முன்பு இந்த புதிய பிளான்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..

 

Bose QC 45 ஹெட்ஃபோன்களின் ஸ்பெசிஃபிகேஷன்கள்..

லேட்டஸ்ட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷஷனுடன் வரும் Bose QC 45 ஹெட்ஃபோன்களில், யூஸர்களின் வசதிக்காக அவேர் மோட் (aware mode) மற்றும் க்விட் மோட் (quiet mode) ஆகிய மோட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. Bose QC 45 யூஸர்களுக்கு வாய்ஸ் ஐசோலேஷன் அம்சத்தையும் (voice isolation feature)வழங்குகிறது. இந்த அம்சம் எந்த சத்தமும் தொந்தரவும் இல்லாமல் வாய்ஸ் கால்ஸ்களை எடுப்பதற்கு ஏற்றது. இந்த ஹெட்ஃபோன்களில் கொடுக்கப்பட்டிருக்கும் சாஃப்ட்-டச் இயர்கப்ஸ் யூஸர்களுக்கு இனிமையான அனுபவத்தை தரும்.

also read : ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாவை அழித்து ஃபேக்ட்ரி ரீசெட் செய்ய வேண்டுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்

இது ஒரு பிரீமியம் ஹெட்ஃபோன் என்பதால் தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்க built-in TriPort acoustic architecture உதவுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்படி Bose QC 45 ஹெட்ஃபோன்களின் ரைட் சைட் இயர்கப்பில் உள்ள 4 பட்டன்கள் ஒலியை அதிகரிக்க மற்றும் குறைக்க, பவர் மற்றும் ப்ளூடூத் இணைப்பிற்காக ஸ்லைடர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. கால்ஸ், மியூசிக் மற்றும் விரிச்சுவல் அசிஸ்டென்ஸிற்காக நான்காவது மல்டி-ஃபங்க்ஷன் பட்டன் உள்ளது. Bose QuietComfort 45 வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் 24 மணிநேர பேட்டரி லைஃபை தரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே போதும் சுமார் 3 மணிநேரம் வரை பிளேபேக்கை பெறலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. நீங்கள் பேட்டரியை சேமிக்க விரும்பினால் அல்லது பிசி-யுடன் இணைக்க வேண்டும் என்றால் எப்போது வேண்டுமானாலும் இந்த ஹெட்ஃபோனை wired mode-க்கு மாற்றி கொள்ளலாம்.

First published:

Tags: Gadgets