பல வழிகளில் நம்மை சோதித்த 2021-ஆம் ஆண்டு இன்னும் சில மணிநேரங்களில் நிமிடம் இருந்து விடைபெற போகிறது. 2020-ல் துவங்கி தற்போது வரை உலக நாடுகளை மற்றும் மக்களை அச்சுறுத்தி வருகிறது கோவிட்-19 பெருந்தொற்று. இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் துவங்கிய டெல்டா வேரியன்ட்டின் ஆட்டமே இன்னும் முடியாத நிலையில், அடுத்து வந்துள்ள ஓமைக்ரான் வேரியன்ட் மக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதிலும் சமீப நாட்களாக ஓமைக்ரான் மின்னல் வேகத்தில் பரவ துவங்கி இருப்பது மக்களையும், நிபுணர்களையும் கவலை அடைய செய்துள்ளது. இதனை தொடர்ந்து பல மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளன. ஓமைக்ரான் வேரியன்ட் காரணமாக சமீபத்தில் அதிகரித்துள்ள பாதிப்புகள் உலக நாடுகளிடையே பல புதிய பயணக் கட்டுப்பாடுகளையும் விதிக்க தூண்டியுள்ளது.
இதன் விளைவாக உலகளவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஓமைக்ரான் நிழல் காரணமாக முடக்கப்பட வாய்ப்பு உள்ளது. இன்று டிசம்பர் 31, ஆண்டின் கடைசி நாள். இதனையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்ட மனநிலையில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இந்த நேரத்தில் கூகுள் தனது அழகான மற்றும் அபிமான டூடுல் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஏற்கனவே துவக்கி விட்டது. புத்தாண்டை முன்னிட்டு கூகுள் வண்ணமயமான டூடுலை உருவாக்கி இருக்கிறது. பீஸ் பலூன்கள் மற்றும் பார்ட்டி அலங்காரங்கள் மற்றும் 2021 ஆண்டு என எழுதப்பட்டுள்ளது.
Also read... 2021 ஆம் ஆண்டில் மக்களுக்கு கைகொடுத்த டாப் 10 ஆப்ஸ்!
2021-ஆம் ஆண்டு முடிவடைவதால், உலகம் முழுவதும் புத்தாண்டை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் இந்த அழகான அனிமேஷன் கிராஃபிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அழகான காட்சியை தவிர, கூகுள் அதன் யூஸர்களுக்கு ஒரு மெசேஜையும் கொண்டுள்ளது, அது 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டு ஈவ்! இன்றைய டூடுலின் மேல் க்ளிக் செய்தால் "New Year's Eve" என்ற மெசேஜ் கொண்ட சர்ச் பேஜ் ஓபன் ஆகி கலர் கலராக கொட்டுகிறது. மேலும் கூகுளின் இன்றைய கூகுள் டூடுல், மாபெரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட லோகோ ஒன்றை கொண்டுள்ளது, மற்றும் நடுவில் 2021 என்று எழுதப்பட்ட ஒரு மாபெரும் கேன்டி உள்ளது.
Also read... 2021 ஆம் ஆண்டில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிகம் ட்ரெண்டிங்கானவை என்னென்ன?
புத்தாண்டு தினத்தையொட்டி கூகுள் வண்ணமயமான டூடுல் ஆர்ட்களுடன் வருவது புதிதல்ல. என்றாலும் தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்களில் கூகுள் கொஞ்சம் கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது. Google-ல் New Year's Eve அல்லது இது தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை நீங்கள் தேடினால், பாப் செய்யத் தயாராக இருக்கும் அனிமேஷன் செய்யப்பட்ட கான்ஃபெட்டி கோனுடன் கூடிய knowledge panel வலது பக்கத்தில் காண்பீர்கள். அதை கிளிக் செய்தால், சர்ச் ரிசல்ட்ஸ் முழுவதும் கான்ஃபெட்டி கலர் கலராக பார்ட்டி சத்தத்துடன் ஷூட் செய்கிறது. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! முயற்சித்து பாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Google Doodle