குரூப்பிலும் ரகசியமாக பேசிக்கொள்ளலாம் - புதிய வசதியை கொண்டு வருகிறது வாட்ஸ்அப்

WhatsApp | உலகம் முழுவதும் வாட்ஸ்அப்-ஐ 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்திவரும் நிலையில், இதில் வணிக ரீதியிலான அம்சங்களை புகுத்த வாட்ஸ்அப் தலைமை திட்டமிட்டுள்ளது.

Lingam A S | news18
Updated: November 2, 2018, 6:01 PM IST
குரூப்பிலும் ரகசியமாக பேசிக்கொள்ளலாம் - புதிய வசதியை கொண்டு வருகிறது வாட்ஸ்அப்
கோப்புப் படம்
Lingam A S | news18
Updated: November 2, 2018, 6:01 PM IST
குரூப்பின் உள்ளே மற்றவர்களுக்கு தெரியாமல் தனிப்பட்ட ஒருவருக்கு ரகசியமாக ரிப்ளே செய்யும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பெஸ்ட் சேட்டிங் ஆப்-ஆன வாட்ஸ்அப், மார்க்கெட்டில் தனக்கிருக்கும் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு அம்சங்களை களமிறக்கி வருகிறது. பயனாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, அனுப்பிய செய்தியை டெலிட் செய்யும் வசதி உள்ளிட்டவை சமீபத்தில் கொண்டுவரப்பட்டது.

இரவிலும் பயனர்கள் கண்கூசாமல் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்த டார்க் மோட் (Dark Mode) வசதி, ஸ்டிக்கர்கள், செயலியை திறக்காமலேயே ரிப்ளை செய்யும் வசதி உள்ளிட்டவை விரைவில் வழங்கப்பட உள்ளன.


பயனாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், முக அடையாளம், கைரேகை ஆகியவற்றைக் கொண்டு வாட்ஸ்அப்-ஐ லாகின் செய்யும் வசதிகளை கொண்டு வர உள்ளது. தற்போது ஆரம்பகட்ட பரிசோதனையில் இருக்கும் இந்த அம்சங்கள், முதலில் ஐ.ஓ.எஸ் ஓஎஸ் பயன்படுத்துபவர்களுக்கும், பின்னர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.

(Photo:Wabetainfo)


குரூப்பில் ஒருவர் பொதுவான தகவலை பதிவிடும் போது, அது தொடர்பாக மற்ற யாருக்கும் தெரியாமல் அதே குருப்பில் தகவலை பதிவிட்டவரிடமே ரகசியமாக நாம் பதிலளித்து பேசக்கூடிய வகையிலான வசதியை பீட்டா வெர்சன் 2.18.335-ல் வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ளது. விரைவில் இந்த ரகசிய ரிப்ளே வசதி அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.

Loading...

(Photo:Wabetainfo)


உலகம் முழுவதும் வாட்ஸ்அப்-ஐ 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்திவரும் நிலையில், இதில் வணிக ரீதியிலான அம்சங்களை புகுத்த வாட்ஸ்அப் தலைமை திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

தற்போது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தில் புகைப்படம், எழுத்துக்கள், வீடியோக்கள், அனிமேஷன் ஜிஃப் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். இவை 24 மணி நேரத்திற்கு பின்தானாக மறைந்து போகும்.

இதையும் பாருங்க..
First published: November 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...