Home /News /technology /

வாட்ஸ்அப் CHAT -க்கு டைமர் செட் பண்ணலாம் - வரப்போகும் அசத்தல் அப்டேட்!

வாட்ஸ்அப் CHAT -க்கு டைமர் செட் பண்ணலாம் - வரப்போகும் அசத்தல் அப்டேட்!

வாட்ஸ்அப் அசத்தல் அப்டேட்

வாட்ஸ்அப் அசத்தல் அப்டேட்

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் -ஐ மாதந்தோறும் 2 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் உபயோகித்து வருகின்றனர்

வாட்ஸ்அப் சாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே மறையும் வகையில் டைமர் செட் செய்து கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம், சாட் செட்டிங்ஸில் 2 புதிய அப்டேட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக WABetaInfo வலைதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமான அப்டேட் என்னவென்றால், யூசர்கள் செய்யும் எல்லா புதிய சாட்களும் தானாகவே மறையும் வகையில் மேனுவல் டைமர் செட் செய்து கொள்ளலாம். மேலும், எவ்வளவு நாட்கள் வரை சாட் பாக்ஸில் மெசேஜ் இருக்கலாம் என்பதையும் தீர்மானித்துக் கொள்ளலாம்.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் -ஐ மாதந்தோறும் 2 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் உபயோகித்து வருகின்றனர். யூசர்களின் Feel Good அனுபவத்துக்காகவும், சாட் பாக்ஸ் பிரைவசியை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய அப்டேட்டுகளை கொண்டுவர உள்ளது. ஏற்கனவே வாட்ஸ்அப்பில் மேற்கொள்ளும் சாட்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் டெலிட் செய்ய முடியும் வசதியை யூசர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவருக்கு அல்லது ஒரு குரூப்பில் தவறாக மெசேஜ் அனுப்பிவிட்டதாக உணரும்போது, உடனடியாக அதனை டெலிட் செய்து கொள்ளலாம்.

WhatsApp disappearing messages
வாட்ஸ்அப்


இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்து வருகிறது. இந்த வசதியை கொண்டுவந்ததற்காக வாட்ஸ்அப்புக்கு வரவேற்பும் தெரிவித்தனர். இந்நிலையில், வாட்ஸ்அப் விரைவில் கொண்டுவர உள்ள இந்த டைமர் அம்சத்தில், குறிப்பிட்ட நேரம் வரை தனிப்பட்ட நபர்களின் சாட் பாக்ஸில் அனுப்பிய மெசேஜ் இருக்குமாறு நாமே செட் செய்து அனுப்பிக் கொள்ள முடியும், அதன்பிறகு அந்த மெசேஜ் அழிந்துவிடும். இப்போது ஒரு மெசேஜ் 24 மணி நேரம், 7 நாட்கள், 90 நாட்கள் வரை சாட்பாக்சில் இருக்குமாறு செட்டிங்ஸ் ஆப்சன் உள்ளது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமே புதியதாக அறிமுகப்படுத்த உள்ள டைமர் ஆப்சன்.

ALSO READ |  எங்கள் சேவையை எந்த அளவுக்கு நம்பியுள்ளீர்கள் என தெரியும் - மன்னிப்பு கேட்ட மார்க்..

WABetaInfo - வலைதளத்தின் தகவல்படி, iOS யூசர்கள் உபயோகப்படுத்தும் WhatsApp -களில் பீட்டா வெர்சனில் வாட்ஸ்அப் நிறுவனம் சோதித்து வருகிறது. ஆன்டிராய்டு வெர்சன்களுக்கு இன்னும் சோதனை தொடங்கப்படவில்லை. இருப்பினும், மிக விரைவில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டுகளை சோதிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

புதிய பிரைவசி பாலிசியை அறிமுகப்படுத்திய பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த வாட்ஸ்அப் நிறுவனம், தங்களுடைய மார்க்கெட்டை தக்கவைக்கும் நோக்கில் புதிய அப்டேட்டுகளை அள்ளிவீசி வருகிறது. மாதம் 2 அப்டேட்டுகள் என அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த அப்டேட்டுகளின் அறிமுகம் வாட்ஸ்அப் மீதான நெகடிவ் விமர்சனங்களை குறைக்கும் என நம்பும் அந்நிறுவனம், போட்டி நிறுவனங்களான டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளுக்கு சவால்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Whatsapp Update

அடுத்த செய்தி