Home /News /technology /

அதிகரித்து வரும் சைபர் தாக்குதலும், புதிய VPN விதிகளும் - யூசர்களின் டேட்டா பாதுகாப்பாக இருக்குமா.?

அதிகரித்து வரும் சைபர் தாக்குதலும், புதிய VPN விதிகளும் - யூசர்களின் டேட்டா பாதுகாப்பாக இருக்குமா.?

(Image Credit: ExpressVPN)

(Image Credit: ExpressVPN)

New VPN Rules | ஆன்லைன் யூசர்கள் பாதுகாப்பாக இயங்க அரசாங்கம் முதல் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் வரை பலவிதமான பாதுகாப்பு அம்சங்களையும் மேம்படுத்திக் கொண்டே வருகிறது.

அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் கீழ், விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (VPN) சேவை வழங்குபவர்கள், சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் பெயர்கள், அவர்களின் முகவரிகள், மின்னஞ்சல் ஐடிகள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை ஐந்து ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VPN புதிய விதிகள் :

ஆன்லைன் யூசர்கள் பாதுகாப்பாக இயங்க அரசாங்கம் முதல் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் வரை பலவிதமான பாதுகாப்பு அம்சங்களையும் மேம்படுத்திக் கொண்டே வருகிறது. நேரடியாக அக்சஸ் செய்ய முடியாத வலைத்தளங்களை, வலைத்தள சேவைகளை அல்லது டிராக் செய்ய முடியாதபடி VPN சேவைகளை பலரும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஆன்லைன் ஃபிராடு, ஹேக்கிங், பிரைவசி இல்லாதமை, அண்டர்கிரவுண்ட் சேனல்கள் என்று பல விதங்களில் VPN பயன்படுத்தி வந்ததை அடுத்து, இந்திய அரசாங்கம் அதிரடியாக ஒரு உத்தரவை வெளியிட்டது.

சில நாட்களுக்கு முன், இந்தியாவில் VPN சேவை வழங்குபவர்களுக்கு புதிய விதிகளை இந்திய அரசாங்கம் வெளியிட்டது. அந்த விதியில் முக்கியமானது, யூசர்களின் டேட்டாவை VPN சேவை வழங்குனர் சேமித்து வைக்க வேண்டும் மற்றும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தான். VPN சேவை வழங்குநர்களுக்கு புதிய விதிகளை இந்தியா வெளியிட்டுள்ள நிலையில், மிகவும் பிரபலமான ExpressVPN இந்தியாவில் தனது சேவையை நிறுத்திக் கொண்டு வெளியேறியது.



 

அதிகரிக்கும் சைபர் புகார்கள் :

இணையத்தில் யூசர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கும் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு முக்கிய நிறுவனமான, CERT-In (Indian Computer Emergency Response Team) வழங்கியுள்ள தரவுகளின் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், 2018ம் முழு ஆண்டை விட அதிகமான சைபர் கிரைம் புகார்கள் பதிவாகியுள்ளன.

Also Read : Blockchain Technology என்றால் என்ன? இதில் டெவலப்பராவதற்கு தேவையான திறன்கள் என்ன?

மேலும், இணையப் பாதுகாப்பின் படி உலக அளவில் சேவை வழங்கும் நிறுவனமான NortonLifeLock, இந்தியாவில் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் 18 மில்லியனுக்கும் அதிகமான இணையத் தாக்குதல்களை தடுத்துள்ளது.

ட்ரெல்லிக்ஸ் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் பகிர்ந்துள்ள தகவல்களும் புள்ளிவிவரங்களும் மேலும் அதிர்ச்சியூட்டும் வண்ணம் உள்ளன. 2021ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மட்டுமே, இந்தியாவில் ransomware தாக்குதல் 70% அதிகரித்துள்ளதாக பதிவாகியுள்ளது.



பதிவு செய்யப்பட்ட புகார்களில் பெரும்பாலானவை சீனா அல்லது ரஷ்யாவை சேர்ந்தவை. ரஷ்யாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஒன்று, அசாம் மாநிலத்தில் இந்தியாவின் (OIL) அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டது. அதில், ஹேக்கர் $75,00,000 கோரினார். அதையடுத்து, 2021ம் ஆண்டில், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் மின் பயன்பாடுகள் ஹேக் செய்யப்பட்டன. மற்றொரு தாக்குதல் அரசாங்க நிறுவனமான BSNL மீது மேற்கொள்ளப்பட்டது. BSNL மீது நடத்தப்பட்ட மால்வேர் தாக்குதலில், சுமார் 2000 பிராட்பேண்ட் மோடம்கள் மற்றும் 60,000 மோடம்கள் பாதிப்படைந்தன.

 

அதிகரித்து வரும் சைபர் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகளும், நாம் இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அளவுக்கு தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியை முன்வைக்கிறது! அதே நேரத்தில், வலுவான சைபர் பாதுகாப்பு வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் தான், இந்தியாவில் VPN சேவைகளில் புதிய விதிகள் மேற்கொள்ளப்பட்டன.

Also Read : இந்த அழைப்புகளை நம்ப வேண்டாம்... ரயில் பயணிகளுக்கு IRCTC முக்கிய எச்சரிக்கை

யூசர்களின் தரவை VPN நிறுவனம் சேமித்து வைக்க வைப்பது ஆபத்தானது

புதிய வழிமுறைகளின் கீழ், VPN சேவை வழங்குநர்கள் வாடிக்கையாளர் பெயர்கள், அவர்களின் முகவரிகள், மின்னஞ்சல் ஐடிகள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை ஐந்து ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும். VPN சேவையைப் பதிவுசெய்யும் வாடிக்கையாளரின் ஐபி மற்றும் மின்னஞ்சல் முகவரிகள், பதிவு செய்யும் நேரம் ஆகியவற்றை சேமித்து வைத்திருக்குமாறு Cert-In கோரியுள்ளது.



 

ஒரு தனிநபரின், அவருடைய தனிப்பட்ட விவரங்களின், தரவின் தனியுரிமைக்கு இவ்வாறு தகவல்களை சேமித்து வைப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். இந்த விதிகளை அமலாக்கம் செய்யும் குழுவும், அரசும் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று பலரும் அஞ்சுவதால், சில யூசர்கள் டார்க் வெப் பயன்படுத்தத் தொடங்கலாம். இந்த சிக்கலை சமாளிக்க, யூசர்களின் தனிப்பட்ட தரவுகள் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு கூடுதலாக விதிமுறைகளை சேர்க்க வேண்டும்.

Also Read : Gmail யூஸர்களே உஷார்... மெயில் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்! 

யூசர்களின் டேட்டா எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்ய, அரசாங்கம் ஏதேனும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். ஐந்தாண்டுகள் வரை யூசர்கள் டேட்டாவை சேமித்து வைப்பது என்று கால அளவைக் குறைக்க வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: India, Technology

அடுத்த செய்தி