• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ரியல்மீ நர்சோ புரோ 20 புது அப்டேட்! என்ன தெரியுமா?

ரியல்மீ நர்சோ புரோ 20 புது அப்டேட்! என்ன தெரியுமா?

Realme narzo

Realme narzo

Android 11 இயக்க முறையை அடிப்படையாகக் கொண்டு Realme UI 2.0 என்ற புதிய அப்டேட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்கிரே வெர்சனை பெறுவதற்கு தொலைபேசியின் ப்ர்ம்வேர் (Firmware) பதிப்பை A.25 (RMX2193_11.A.25) க்கு புதுப்பிக்க வேண்டும்.

  • Share this:
ரியல்மி நிறுவனம் ஆன்டிராய்டு 11 -ஐ அடிப்படையாகக்கொண்ட ரியல்மி யு.ஐ 2.0 அப்டேட்டை நர்சோ 20 புரோவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவில் நர்சோ 20 ப்ரோ பயனர்களுக்காக ரியல்மி நிறுவனம் யு.ஐ 2.0 அப்டேட்டை வெளியிடத் தொடங்கியுள்ளது. Android 11 இயக்க முறையை அடிப்படையாகக் கொண்டு Realme UI 2.0 என்ற புதிய அப்டேட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்கிரே வெர்சனை பெறுவதற்கு தொலைபேசியின் ப்ர்ம்வேர் (Firmware) பதிப்பை A.25 (RMX2193_11.A.25) க்கு புதுப்பிக்க வேண்டும். இந்த அறிவிப்பை ரியல்மி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட் என்பது படிபடிப்படியாக அனைத்து யூசர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ள ரியல்மி, முதல்கட்டமாக ஒரு சில யூசர்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

யூசர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப, அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும் என ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது. கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உடனடியாக எடிட்டிங் செய்யும் வழியில் பல்வேறு ஷார்ட்கட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், பொதுவெளியில் குறைவான சவுண்ட் இருந்தால், இரைச்சல்களுக்கு ஏற்ப ஒலி உயரும் அம்சமும், ஹெட்போனில் கேட்கும்போது சவுண்ட் குறையும் அம்சமும் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபோட்டோ செயலியிலும் குறிப்பிட்டதக்க அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பில்டர்ஸ், மேக்கப் அம்சங்களின் அல்காரிதம் மாற்றப்பட்டு, அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது.

புதிய வசதிகள்

உங்களுக்கான யூசர் பக்கத்தை நீங்களே உருவாக்கிக்கொள்ளலாம். உங்கள் புகைப்படங்களில் உள்ள கலர்களை நீங்களே தேர்ந்தெடுத்து வால்பேப்பரை செட் செய்து கொள்ளலாம். மூன்றாம் நபர் செயலி ஐகான்கள் ஹோம் ஸ்கிரீனில் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்கிரீன் ஒளி, சுற்றுப்புற ஒளிக்கு ஏற்ப தானாக மாறிக்கொள்ளும். ஸ்பிளிட் ஸ்கிரீன் மோடில் இருந்து டெக்ஸ்ட் அல்லது புகைப்படங்களை நகர்த்திக்கொள்ளும் வசதி உள்ளது. ஃபோல்டர்களை நீக்கவோ அல்லது ஒன்றுடன் ஒன்றை சேர்த்துக்கொள்ள முடியும். செயலி ஒன்றை நீங்கள் தேடிக்கொண்டிருக்க தேவையில்லை, ஸ்கிரீனில் அந்த செயலிக்கான எழுத்துகளை எழுதினால், அந்த செயலியை உடனடியாக எடுத்துவிடலாம்.

குயிக் செட்டிங்ஸில் ஆப்லாக் (App lock" )ஆப்சன் மூலம் செயலியை ஆன் அல்லது ஆப் செய்துகொள்ளலாம். ஒருவேளை உங்கள் தொலைபேசியில் 15 விழுக்காட்டுக்கும் குறைவாக செல்போன் பேட்டரி குறைந்துவிட்டால், நீங்கள் தொடர்பு கொள்ளும் விரும்பும் நபருக்கு உடனடியாக மெசேஜ் செய்து கொள்ளும் ரிமைண்டர் உள்ளது. முன்பைக் காட்டிலும் அதிக திறனுடன் SOS செயல்பாடு இருக்கும். அவசர கால செய்திகளை உடனடியாக, உரிய நபருக்கு காண்பிக்கும் அம்சம் புதிய அப்டேட்டில் உள்ளது. கேம் விளையாடும்போது இடையில் எந்த இடர்பாடுகளும் ஏற்படாத இருக்கும் வகையில் செட்டிங்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது. கேம் விளையாடும்போது உங்களின் ஹாட்ஸ்பாட்டை QR கோட் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: